Thursday, August 18, 2005

நெருப்பாற்றில் இருபது ஆண்டுகள்.

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக இருபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.

யுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருக்கிறது. உடலளவிலும் மன அளவிலும் எல்லோருக்கும் ஒரேயளவு பலம் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது. அதாவது ஆண்களைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.

120 m.m. கனரகப் பீரங்கியை தண்ணீருக்குள்ளால் இழுத்துச் செல்லும் பெண்புலிகள்.(மாமுனைத் தரையிறக்கச் சமர்)

ஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம் நிற்கும். மழை பொழியப்பொழிய சண்டை நடக்கும். நெஞ்சளவு தண்ணீருக்குள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள். ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும்.



தங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்கிறார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருக்கிறார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்துகிறார்கள். எமது தமிழ்ச்சமூகத்தில் இது முக்கிய திருப்புமுனைதான். ஆனால் இம்மாற்றம் தனியே போராளிகளுக்கு மட்டும் பொருந்திப் போவதும் சமூகத்தில் இன்னும் பெரியளவு மாற்றம் வராததும் சாபக்கேடு.


முன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நடந்த தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி கேணல் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே.



120 m.m. எறிகணைச் செலுத்தியை இயக்கும் பெண்புலிகள்

இன்று தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டுள்ள மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் மருத்துவ உதவிகளாகவும், பரப்புரை மற்றும் வெளயீட்டு உதவிகளாகவுமிருந்த பெண்களின் பங்களிப்பு, 1985 இலிருந்து இராணுவப்பங்களிப்பாக பரிணமித்தது. இன்று தவிர்க்கவே முடியாதபடி அவர்களின் பங்களிப்பு எங்கும் எதிலும் வியாபித்துள்ளது.


இருபதாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இந்நேரத்தில் அவர்களை வாழ்த்துவதோடு மேலும் சிறப்பாகச் செயற்பட்டுத் தமது இலக்கை அடைய ஆசிக்கிறோம்.

இந்நேரத்தில் சில ‘புத்திஜீவிகள்’ போராட்டத்திலீடுபட்டதால் அவர்கள் ‘பெண்மைத் தன்மையை’ இழந்துவிட்டார்களென்று கூக்குரலிட்டார்கள். அவர்கள் தான் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற பெண்ணியவாதிகள். (இப்போது சத்தத்தைக் காணவில்லை. திருந்திவிட்டார்களா அல்லது கத்திச் சலித்துவிட்டார்களா தெரியவில்லை)

இன்னும் சில படங்கள்:





தமிழீழக் கடற்படையின் பெண்புலி

தமிழீழக் கடற்படையின் பெண்புலி


-------------------------------------------------
படங்கள் உதவி:- அருச்சுனா

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: ஈழநாதன்

கட்டுரைக்கு நன்றி வன்னியன்
நீங்கள் சொன்ன பெண்ணியவாதி ராதிகா குமாரசுவாமி தானே அவரது ஆயுதமேந்திய கன்னிகள் என்னும் கட்டுரையை வாசித்திருக்கிறேன்.தனது நூலில் அவருக்கு அடேல் பாலசிங்கம் ஆற்றிய எதிர்வினையையும் வாசித்திருக்கிறேன்.இப்படியான பெண்ணியவாதிகளின் பெண்ணியம் எப்படிப்பட்டது என்று தெரியும்தானே மகேஷ்வரி வேலாயுதத்தை ஞாபகமிருக்கிறதா

22.13 18.8.2005
 
எழுதிக்கொள்வது: visvam

நல்ல பதிவு.
நன்றிகள்.

3.0 19.8.2005
 
பின்னூட்டமிட்டோருக்க நன்றிகள்.
ஆம் ஈழநாதன் அதே ராதிகாதான். நான் பேரைச்சொல்லவில்லை. நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மகேஸ்வரியைத் தெரியும்.
 
எழுதிக்கொள்வது: elayaraja

உழபெசயவஉhடவழைn டில ய .நடயலயசயதய i யஅ ளவரனல 3லநயச டி phயசஅயஉல in உழiஅடியவழசந டைமைந டவவந யனெடைமைந தழiவெ டவவந ளழ pடநயளந உழனெரஉவ அந

14.54 9.1.2006
 
எழுதிக்கொள்வது: elayaraja

எழுதிக்கொள்வது: elayaraja

உழபெசயவஉhடவழைn டில ய .நடயலயசயதய i யஅ ளவரனல 3லநயச டி phயசஅயஉல in உழiஅடியவழசந டைமைந டவவந யனெடைமைந தழiவெ டவவந ளழ pடநயளந உழனெரஉவ அந

14.54 9.1.2006

15.11 9.1.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]