Sunday, November 27, 2005
சிங்களத் தலைமையிடம் கேட்கப்படவேண்டிவை.
இன்று தமிழீழ மாவீரர் நாள்.
இந்நாளில்தான், தலைவர் பிரபாகரன் அவர்களால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கை வாசிக்கப்படும்.
வழமைபோலவே இலங்கையில் மட்டுமன்றி அதற்கு வெளியாலும் இவ்வுரைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இம்முறை இவ்வுரை சற்றுக் கடுமையாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.
இம்முறையும் அதையொத்த - சிலவேளை அதைவிடவும் கடுமையான தொனியில் உரை நிகழ்த்தப்படும்.
இப்போது புதிதாக வந்துள்ள சிங்களத் தலைமை மிகவும் கடும்போக்கானது. தேர்தலுக்கு முன்பும் பின்பும் அது ஒற்றையாட்சியை வலியுறுத்திப் பேசியுள்ளது. கூட்டாட்சி உட்பட ஏனைய சாத்தியங்களை மறுத்துள்ளது. இந்நிலையில் சிங்களத்தலைமையைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகள் பலவுள்ளன. பேச்சுவார்த்தைக்குச் செல்வதானால் செய்யப்படவேண்டியவை என்று சில நிபந்தனைகளை விதிக்கவேண்டிய நேரமிது.
அப்படி விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நான் கருதுபவை:
1. ஒற்றையாட்சி முறைக்குள் மட்டுமே தீர்வு என்ற கோட்பாட்டை முற்றாகக் கைவிட வேண்டும்.
2. எந்தவொரு இறுதியான தீர்வை எட்டும் வரைக்கும் ஆயுதக் களைவு பற்றிய கேள்விக்கே இடமில்லை.
3. பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் எந்த ஒப்பந்தமும் சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படக் கூடாது. அதாவது எட்டப்படும் எந்த முடிவும் நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குள் இருக்கக்கூடாது. (இக்கோரிக்கைக்கான காரணங்கள் கடந்த 4 வருடங்களில் நிறைய உண்டு).
மேற்கூறிய மூன்று நிபந்தனைகளும் அடிப்படையானவை. இவைபற்றி பகிரங்கமாக சிங்களத் தலைமை அறிவித்த பின்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும். அல்லாத பட்சத்தில் சும்மா காலத்தை இழுத்தடிப்பதாகவும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதாகவுமே இருக்கும்.
அதைவிட, கடந்த வருட உரையில் கூறியதுபோல, சிங்களத் தலைமையால் தமிழர்களுக்கென அவர்கள் வழங்கத் தயாராயிருக்கும் தீர்வுத்திட்டத்தைக் கேட்டுப் பெறல்.
இவற்றைவிட சிங்களத் தலைமைக்கும் உலகத்துக்கும் சொல்ல நிறைய உண்டு.
இவையெல்லாம் சேர்ந்து தீர்க்கமான, உறுதியான உரையொன்றை எதிர்பார்க்கிறேன்.
-------------------------------------------------------
தமிழர் தீர்வு விடயத்தில் உலகநாடுகளின் மெத்தனப்போக்கு வியப்பளிக்கிறது. ராஜபக்ஷ சமஸ்டி உட்பட்ட சாத்தியக்கூறுகளை மறுத்து ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று உறுதியாக உரையாற்றியுள்ளார். ஆனால் ஒஸ்ரேலியா அதை வரவேற்றுள்ளது. அப்படியானால் ஒற்றையாட்சியைத்தான் தமிழர்களுக்கான தீர்வாக அவர்கள் முன்மொழிகிறார்களா?
------------------------------------------------------
தமிழ்ப்பதிவுகள்

போனதடவை, சிங்கத்தலைமையால் தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை முன்வையுங்களென்று பிரபாகரனால் கேட்கப்பட்டது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடும் என்று பரவலாக எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை. இதற்கு சுனாமி தான் முதற்காரணமென்று சொல்லப்பட்டது.
இம்முறையும் அதையொத்த - சிலவேளை அதைவிடவும் கடுமையான தொனியில் உரை நிகழ்த்தப்படும்.
இப்போது புதிதாக வந்துள்ள சிங்களத் தலைமை மிகவும் கடும்போக்கானது. தேர்தலுக்கு முன்பும் பின்பும் அது ஒற்றையாட்சியை வலியுறுத்திப் பேசியுள்ளது. கூட்டாட்சி உட்பட ஏனைய சாத்தியங்களை மறுத்துள்ளது. இந்நிலையில் சிங்களத்தலைமையைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகள் பலவுள்ளன. பேச்சுவார்த்தைக்குச் செல்வதானால் செய்யப்படவேண்டியவை என்று சில நிபந்தனைகளை விதிக்கவேண்டிய நேரமிது.
அப்படி விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நான் கருதுபவை:
1. ஒற்றையாட்சி முறைக்குள் மட்டுமே தீர்வு என்ற கோட்பாட்டை முற்றாகக் கைவிட வேண்டும்.
2. எந்தவொரு இறுதியான தீர்வை எட்டும் வரைக்கும் ஆயுதக் களைவு பற்றிய கேள்விக்கே இடமில்லை.
3. பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் எந்த ஒப்பந்தமும் சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படக் கூடாது. அதாவது எட்டப்படும் எந்த முடிவும் நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குள் இருக்கக்கூடாது. (இக்கோரிக்கைக்கான காரணங்கள் கடந்த 4 வருடங்களில் நிறைய உண்டு).
மேற்கூறிய மூன்று நிபந்தனைகளும் அடிப்படையானவை. இவைபற்றி பகிரங்கமாக சிங்களத் தலைமை அறிவித்த பின்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும். அல்லாத பட்சத்தில் சும்மா காலத்தை இழுத்தடிப்பதாகவும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதாகவுமே இருக்கும்.
அதைவிட, கடந்த வருட உரையில் கூறியதுபோல, சிங்களத் தலைமையால் தமிழர்களுக்கென அவர்கள் வழங்கத் தயாராயிருக்கும் தீர்வுத்திட்டத்தைக் கேட்டுப் பெறல்.
இவற்றைவிட சிங்களத் தலைமைக்கும் உலகத்துக்கும் சொல்ல நிறைய உண்டு.
இவையெல்லாம் சேர்ந்து தீர்க்கமான, உறுதியான உரையொன்றை எதிர்பார்க்கிறேன்.
-------------------------------------------------------
தமிழர் தீர்வு விடயத்தில் உலகநாடுகளின் மெத்தனப்போக்கு வியப்பளிக்கிறது. ராஜபக்ஷ சமஸ்டி உட்பட்ட சாத்தியக்கூறுகளை மறுத்து ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று உறுதியாக உரையாற்றியுள்ளார். ஆனால் ஒஸ்ரேலியா அதை வரவேற்றுள்ளது. அப்படியானால் ஒற்றையாட்சியைத்தான் தமிழர்களுக்கான தீர்வாக அவர்கள் முன்மொழிகிறார்களா?
------------------------------------------------------
தமிழ்ப்பதிவுகள்
Labels: அரசியற் கட்டுரை, மாவீரர், வரலாறு
Comments:
<< Home
இவ்வருட உரையில் சில விசயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கடந்த வருடம் யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போராட்டத்தை தொடக்க எண்ணியிருந்ததையும் அது சுனாமியால் காலதாமதமானதையும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனவாதத்தைச் சரியாக உரித்துக்காட்டியிருக்கிறார். மகாவம்சத்திலிருந்து தொடர்ந்து வரும் வன்மத்தைச் சொல்லியுள்ளார்.
மகிந்தவுக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கிப்பார்ப்போம் என்று சொல்லியுள்ளார்.
குறுகிய கால அவகாசமொன்று மகிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திலிருந்து தாயகப்போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் சொல்லியுள்ளார்.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]