Sunday, January 15, 2006

கேணல் கிட்டு நினைவாக.....

இந்திய அரசின் அத்துமீறலாற் பலியான மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட்ட மாவீரர்களின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவுநாள் இன்று.

கேணல் கிட்டு தமிழீழப் போராட்ட வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத, ஈடு செய்ய இயலாத அத்தியாயம்.
யாரையும் இலகுவில் புகழ்ந்து கூறாத பிரபாகரனின் கூற்றின் படி,
"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்".

தொடக்க காலத்தில் அவரின் பணிகள் சொல்லற்கரியவை. (அதிகளவிற் சர்ச்சைக்குள்ளானவரும் கூட) யாழ்ப்பாணத்தை ஏறக்குறைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்.
காலிழந்த பின்னும் முழுவீச்சோடு செயற்பட்டவர். இந்திய இராணுவத்துடனான மோதற்காலத்தில் சென்னையிலிருந்து ஏராளமான வேலைகளைச் செய்தார். அந்நேரத்தில் ஈழத்து நடப்புக்களை ஓரளவுக்காவது வெளியுலகத்துக்குக் கொண்டு வந்ததில் இவரின் பங்கு முக்கியமானது. பின் தாயகம் திரும்பி, இயக்க வேலையாக வெளிநாடு சென்றார். இறக்கும் வரை தாயகம் திரும்பவில்லை.


வெளிநாட்டில் இவர் செய்த பணிகளும் காத்திரமானவை.
லெப்.கேணல் குட்டிசிறி உட்பட போராளிகள் சிலரோடு தாயகம் நோக்கிப் பயணித்த வேளையில் இந்தியக் கடற்படையால் சர்வதேசக் கடற்பரப்பில் இவரது கப்பல் வழிமறிக்கப்பட்டது. பலவந்தப்படுத்தி இந்தியக் கரையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டபோது, கப்பற்சிப்பந்திகளைக் கடலிற் குதித்துத் தப்பிக்க வைத்துவிட்டு அப்போராளிகள் அனைவரும் கப்போலோடு சேர்த்துத் தம்மையும் அழித்துக் கொண்டனர்.

அவர்கள் நினைவான பாடலொன்றைக் கேளுங்கள்.




Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: லோகன்

பதிவுக்கும் பாட்டுக்கும்

16.43 16.1.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]