Saturday, March 12, 2005
பெயரை மாற்றவா?...-ஒரு கருத்துக் கணிப்பு.
வணக்கம்!
வன்னியன் எண்ட புனைபேரில 'பூராயம்' எண்ட இந்தப் பகுதிய நடத்திக்கொண்டு வாறன். புனைபெயரில எழுத வேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இருக்கேலதான். சும்மா ஒரு விளையாட்டுத் தனத்திலதான் இப்பிடிச் செய்தனான். இப்ப வன்னியன் எண்ட பேரோட வீரமான ஒருத்தரும் பதிவு வச்சிருக்கிறார். அங்க கொஞ்சம் சீரியசான விவாதங்கள் நடக்குது. இதுக்க நானும் வன்னியன் எண்டு பேர் வச்சுக்கொண்டிருக்கிறது கொஞ்சம் சங்கடமாயிருக்கு.
அதால ஏற்கெனவே என்ர சொந்தப் பேரில வச்சிருக்கிற வலைப்பக்கத்த மாதிரி இதயும் அதே பேரிலயே பதிவு செய்யலாமெண்டு நினைக்கிறன். இதில சில சிக்கலுகளும் இருக்கு. என்ன... முந்தின பின்னூட்டங்களில வன்னியன் எண்டு இருக்கும். மற்றாக்களும் வன்னியன் எண்டே என்ன விளிச்சிருப்பினம். இப்ப திடீரெண்டு மாத்தினா புதுசா வாற ஒராளுக்கு இது குழப்பத்தத் தான் தரும். அதோட தமிழ்மணம் பதிவுகளிலயும் ஏதேனும் பிரச்சின வருகிதோ தெரியேல. அதால என்ன செய்யிறதெண்டு யோசிக்கிறன்.
உண்மையில என்ர மற்றப் பதிவ விட வித்தியாசமா எழுதுவோம் எண்டுதான் இதத் துவக்கினனான். ஆனா நினைச்ச மாதிரி இன்னும் சரியா வரேல. என்ன மாதிரி கொண்டுபோறது எண்டும் தெரியேல. இப்போதைக்கு சும்மா சளாப்பிக் காலத்தக் கடத்தலாம்.
அதுக்குள்ள ஏதோ ஒரு வீறாப்பில சந்திரவதானா அக்காவிட்ட (அக்கா எண்டு சொன்னாக் கோவிக்க மாட்டியள்தானே) “நான் ரெண்டு பேரில எழுதிறன். ஏலுமெண்டாக் கண்டுபிடியுங்கோ பாப்பம்” எண்டு சவாலும் விட்டிட்டன். இப்ப எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தானே. எதுக்கும் மனுசி வந்து பின்னூட்டம் குடுக்க முதல் பேர மாத்திறது உசிதமெண்டு நினைக்கிறன்.
இருந்தாலும் வாசகரிண்ட (அப்பிடி ஆராவது இருக்கிறியளோ?) விருப்பத்தத்தான் எதிர்பாக்கிறன். உங்கட கருத்துக்கள எழுதுங்கோ.
Labels: பதிவர் வட்டம்
	
			Comments:
      
<< Home
				
				எழுதிக்கொள்வது: சயந்தன்
பெயர் மாத்துறதெண்டால்.. எதுக்கும் டொக்ரர் ராமதாஸ் ஐயாவையும் திருமாவளவனையும் ஒருக்கா கேளுங்கோ.. அவை தான் இப்ப இதுகளுக்கு பொறுப்பு..
3.29 13.3.2005
				
			பெயர் மாத்துறதெண்டால்.. எதுக்கும் டொக்ரர் ராமதாஸ் ஐயாவையும் திருமாவளவனையும் ஒருக்கா கேளுங்கோ.. அவை தான் இப்ப இதுகளுக்கு பொறுப்பு..
3.29 13.3.2005
				
				//பெயர் மாத்துறதெண்டால்.. எதுக்கும் டொக்ரர் ராமதாஸ் ஐயாவையும் திருமாவளவனையும் ஒருக்கா கேளுங்கோ.. அவை தான் இப்ப இதுகளுக்கு பொறுப்பு..
//
:))
You can move your posts to your original blog and continu ethere. I loved reading about your experiences in vanni.
-Mathy
				
			//
:))
You can move your posts to your original blog and continu ethere. I loved reading about your experiences in vanni.
-Mathy
				
				வன்னியன் எண்டே இருக்கட்டுமே. வீரவன்னியன் வேறை வெறும் வன்னியன் வேறை எல்லோ? வன்னியன் வாசிக்கிற கூட்டமும் வீரவன்னியன் வாசிக்கிற கூட்டமும் இந்த வித்தியாசத்தை நல்லா விளங்கி வச்சிருக்கினமெண்டுதான் நினைக்கிறன்.
இதெல்லாம் சின்ன விஷயம். நீங்கள் மாத்தத்தேவையில்லை எண்டதுதான் என்ரை கருத்து.
மார்டன் கேர்ள் ஆரெண்டுகூட சம்சயம் இருக்கு; நீங்கள் ஆரெண்டு இண்டைக்குவரைக்கும் யோசிக்கேல்லை
				
			இதெல்லாம் சின்ன விஷயம். நீங்கள் மாத்தத்தேவையில்லை எண்டதுதான் என்ரை கருத்து.
மார்டன் கேர்ள் ஆரெண்டுகூட சம்சயம் இருக்கு; நீங்கள் ஆரெண்டு இண்டைக்குவரைக்கும் யோசிக்கேல்லை
				
				எழுதிக்கொள்வது: பொடிச்சி
வன்னியன் எண்டிறது ஒரு homesickness ஐ பிரதிபலிக்கிறாபோல இருக்கு. அதுவே நல்லா இருக்கெண்டு நினைக்கிறன்.
14.1 12.3.2005
				
			வன்னியன் எண்டிறது ஒரு homesickness ஐ பிரதிபலிக்கிறாபோல இருக்கு. அதுவே நல்லா இருக்கெண்டு நினைக்கிறன்.
14.1 12.3.2005
				
				எழுதிக்கொள்வது: Mathy Kandasamy
இப்பதான் வீரவன்னியன் யாரென்று பார்த்துவிட்டு வருகிறேன்.
அவர் இருக்கிறாரென்று மாறத் தேவையில்லை. பெயரிலி சொன்னதுபோல ரெண்டு பேரும் வேற வேற தளத்தில் இருக்கீங்க. அதைத்தவிர, புனைப்பெயரில் இருந்து சொந்தப் பெயருக்கு மாறவேண்டுமென்ரால் மாறவும். மத்தபடி, இப்போல்லாம் யாரும் ஐய்யயோ முகமூடி என்று பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.
14.43 12.3.2005
				
				எனக்கும் நீங்கள் பேரை மாற்ற அவசியம் இல்லை எனவே தோன்றுகிறது. உங்கள் வன்னி பற்றிய பதிவுகளை நான் ரசித்தேன். அது மாதிரியான பதிவுகளை நீங்கள் இதில் தொடர்ந்து எழுதலாம்.
				
				நன்றி சயந்தன், ஈழநாதன், பெயரிலி, மதி கந்தசாமி, கௌதமன், தங்கமணி மற்றும் பொடிச்சி. சயந்தன் கொஞ்ச நாளைக்கு முதலே என்ர மற்றப் பேரயும் பூராயத்தையும் இணைச்சு எழுதி ஒரு குறளி வேல பாத்தவர். இப்ப ஈழநாதன் வந்து நீர் ஆரெண்டு தெரியாதோ எண்டு வெருட்டிப் போட்டுப் போறார். ஆனா நான் எதையும் மறைக்கேலத் தானே. இது தொடங்கின நாளிலயிருந்து என்ர ரெண்டு தளத்திலையுமே மற்றத் தளங்களுக்கு இணைப்புக் குடுத்து வச்சிருக்கிறன். 
சரி, நீங்கள் எல்லாருமே பேர மாத்த வேண்டாமெண்டு விரும்பிறியள். அதன்படியே விட்டுவிடுறன். தொடர்ந்து கருத்துக்களெழுதும் வாசக அன்பர்களுக்கு நன்றி.
				
			சரி, நீங்கள் எல்லாருமே பேர மாத்த வேண்டாமெண்டு விரும்பிறியள். அதன்படியே விட்டுவிடுறன். தொடர்ந்து கருத்துக்களெழுதும் வாசக அன்பர்களுக்கு நன்றி.
				
				எழுதிக்கொள்வது: மகிழன்
எனக்கும் நீங்கள் இந்தப் பெயரில் எழுதுவதுதான் சரியாகப் படுகிறது.
19.18 13.3.2005
				
			எனக்கும் நீங்கள் இந்தப் பெயரில் எழுதுவதுதான் சரியாகப் படுகிறது.
19.18 13.3.2005
				
				நான் நினச்சது நடந்துபோச்சுப் போல. மன்னை மாதவனின்ர பதிவில எல்.எல்.தாசு என்னை ராமதாசின் வன்னியனாக அடையாளம் கண்டிட்டார். ம்... என்ன செய்ய?
				
				அன்பு நண்பரே!
என் பதிவில் தங்களுக்கு ஏற்பட்ட மனத்தாங்கலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். தாசு வலைத்தளத்தில் சென்று அவரின் எல்லா உள்ளீட்டையும் படித்தேன். அவரும் தமிழ் உணர்வில்தான் நிற்கிறார். எனவே தங்கள் இதைப் பெரிது படுத்தாது, இதே பெயரில் தொடர அன்போடு வேண்டுகிறேன். விரைவில் தாசு கூட இதை உணர்ந்து உங்களோடு நட்பாகலாம். நாம் எல்லோரும் சோதரர்கள் தானே!
அன்புடன்
மன்னை மாதேவன்
				
				மன்னை மாதவன்! தேடிப்பிடித்துப் பின்னூட்டமிட்டதுக்கு நன்றி. எனக்கும் தாசுக்கும் அப்பிடியென்ன தனிப்பட்ட பிரச்சின? எதுவுமில்ல. எடுத்தோடன பேர வச்சு சாதியப் பார்வையில பாக்கிறதுதான் அந்த இடத்தில பிடிக்கேல. அதோட ராமதாஸ் மேலயும் திருமா மேலயும் இருக்கிற கோபத்த அவயளின்ர வாயால வாற, ஆனா நிச்சயமாய்த் தேவயான நல்ல கருத்துக்கள் மேல காட்டிறார்  எண்டதும் சேத்துத்தான். வன்னியன் எண்ட பேரில பின்னூட்டமிட்டதும் என்ர பிழ தான். இது பரச்சினையே இல்ல. விடுங்கோ.
				
				என்னவோ எல்லாரும் மாத்து, மாத்தவேண்டாம் எண்டு எழுதித்தள்ளீனம். நானும் எட்டிப்பாத்தன் ஒரு இழவும் விளங்கேலை. டக் டிக் டோஸ் போட்டுப் பாத்தன் மாத்து எண்டு வந்தது. என்னத்தை எண்டு விளங்காட்டியும் என்ர டக் டிக் டோஸ் இல் இருக்கும் மதிப்பால் கூறுகிறேன். வன்னியரே மாத்துமையா.
				
				கறுப்பி! பின்னூட்டத்த மட்டுமோ பாத்தனியள்? உங்களுக்கு விளங்காத படியா நான் சரியாத்தானாக்கும் எழுதியிருக்கிறன் எண்டு சந்தோசப்படுறன்.:-). (நீங்கள் சொன்னதுக்காகவே கட்டாயமாக மாத்த மாட்டன். என்ன செய்வியள்?) அதுசரி! இன்னும் டக்டிக்டோஸ் விளயாடுறியளோ? ஒழுங்கா பள்ளிக்கூடத்தில தாற வீட்டுவேலயளச் செய்துபோட்டுப் பிறகு என்னெண்டாலும் விளயாடுங்கோ.
				
				Mr. Vanniyan..
Do one thing.. First of all delete your 2 blogs.. and then start a new one with new name... Howz it?! :)
				
			Do one thing.. First of all delete your 2 blogs.. and then start a new one with new name... Howz it?! :)
				
				எழுதிக்கொள்வது: வன்னியன்
கருத்துக்கு நன்றி மாயவரத்தான்!
நீங்கள் தான் உருப்படியா ஒரு யோசினை சொல்லியிருக்கிறியள்.
ஆயிரம் ஆனாலும் மாயவரத்தான் யோசின போலாகுமா?
-வன்னியன்-
9.41 18.3.2005
				
			கருத்துக்கு நன்றி மாயவரத்தான்!
நீங்கள் தான் உருப்படியா ஒரு யோசினை சொல்லியிருக்கிறியள்.
ஆயிரம் ஆனாலும் மாயவரத்தான் யோசின போலாகுமா?
-வன்னியன்-
9.41 18.3.2005
				
				வன்னியன்,
உங்களின் எந்தப் பதிவையும் என்னால் படிக்க இயலுவதில்லை. சில வைரஸ் பிரச்சினைகளால் இப்போது மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். மொசில்லாவில் align=justify செய்த பதிவுகளைப் படிக்க இயலாது. எழுத்துக்களைத் தனித்தனியாகப் பிய்த்துப்போட்டுவிடும். நீங்கள் பதிவுகளை justify செய்யாமல் இருந்தால் இன்னும் கொஞ்சப்பேரால் உங்கள் பதிவைப் படிக்க இயலும். உங்களின் இன்னொரு பதிவினையும்தான். தமிழீழம் போன்ற சில பதிவுகளிலும் இதே பிரச்சினை இருக்கிறது.
சொல்ல வந்ததைச் சொல்லுகிறேன்.. இது உங்கள் வலைப்பதிவு, உங்களின் சுதந்திரமான எழுத்தும்,கருத்துமே இங்கு மிக முக்கியம். இல்லாவிட்டால் நீங்கள் மற்ற பத்திரிகைகளில் எழுதுவதற்கும் உங்கள் பதிவில் எழுதுவதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனவே, நீங்கள் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றுங்கள், மாற்றவிரும்பாவிட்டால் மாற்றாதீர்கள்
இது align=justify க்கும் பொருந்தும் :-) .
				
			Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Comments [Atom]