Friday, July 29, 2005
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தமிழீழத் தொலைக்காட்சி.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஒளிபரப்பாகிவரும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஓளிபரப்புக்கள் ஆகஸ்ட் முதலாம் நாள் முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.00 மணியளவில் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள் அடங்கிய கோவையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா ஊடகவியலாளர்களிடம் வழங்கினார்.
"நிதர்சனம்" நிறுவனமானது 1987 பெப்ரவரி 14 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலமாக இயங்கி வந்த இச்சேவை, 1987 ஒக்டோபர் 11 இல் இந்திய இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது.
இவ் ஒளிபரப்பு 2005ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாளிலிருந்து தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஐரோப்பிய நாடுகளில் ஒரு மணித்தியால ஒளிபரப்பாக இடம்பெற்று வருகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட முதலாம் நாள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது ஒளிபரப்புச் சேவையினை தொடக்கவுள்ளது.
இவ்வொளிபரப்புப் பற்றி இந்தியா இன்னும் கருத்து எதுவுஞ் சொல்லவில்லை. நிச்சயம் இதைக் கடுமையாக எதிர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பு இந்தியாவை எட்டும்போதே தனது கடுமையான எதிர்ப்பை இந்தியா காட்டியது. இது தொலைக்காட்சிச் சேவை. எனவே இன்னும் கடுமையாக நடந்துகொள்ளும். ஆனால் இவற்றைத்தாண்டி இச்சேவை நடத்தப்பட வேண்டுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நன்றி:- புதினம், மட்டக்களப்பு ஈழநாதம்.
Labels: செய்தி, துயர் பகிர்தல்
எனக்கென்னவோ இந்த தொலைக்காட்சியால இந்தியாடை பாதுகாப்புக்கும் இறைமைக்கும் ஆபத்து வரும் போலத் தான் படுகிறது. :))
20.33 29.7.2005
;-)
உந்தப் 'பனி'யன்கள (இந்தியன்)எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க ஏலாது. தொழில்நுட்பம் எங்கயோ போட்டுது. தமிழக தமிழருக்கு எங்கட உண்மை நிலையை அவை எவ்வளவு நாளைக்கு தான் மூடி மறைப்பினம். மற்றது . . . அவையின்ட சன் ரீவி மட்டும் இஞ்ச வரலாம் எங்கட ரீவி மட்டும் போக கூடாதோ?
15.6 30.7.2005
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]