Tuesday, January 10, 2006
மேஜர் சோதியாவின் நினைவுநாள்.
          இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் பதினாறாவது ஆண்டு நினைவுதினம்.
மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார்.
இவரின் பெயரில் 'சோதியா படையணி' என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்றுவரை ஏறத்தாள ஐநூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்றுவரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி.
தமிழ்ப்பதிவுகள்
          
  ![]() 'மைக்கேல் வசந்தி' என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார். மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.
'மைக்கேல் வசந்தி' என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார். மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.
மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார்.
இவரின் பெயரில் 'சோதியா படையணி' என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்றுவரை ஏறத்தாள ஐநூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்றுவரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி.
தமிழ்ப்பதிவுகள்
Labels: நினைவு, மாவீரர், வரலாறு
	
			Comments:
      
<< Home
				
				வன்னியன்,
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
(மேஜர் சோதியாவின் நினைவு நாள் கட்டுரையில் இதை இடுவதற்காக மன்னிக்கவும்)
				
			Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Comments [Atom]