Sunday, April 23, 2006
போய் வருகிறேன்.
நட்சத்திரக் கிழமையில் என் வலைப்பதிவுக்கு வந்து போன அனைவருக்கும் நன்றி.
சரியான ஆயத்தப்படுத்தலில்லாமல் இந்தக் கிழமையைக் கழித்தேன். நான் மினக்கெட்ட விசயமென்றால் பாடல்களை ஒழுங்குபடுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட 15 பதிவுகள் வரை இந்தக்கிழமையில் என்னால் இட முடிந்துள்ளது. அனைத்துமே ஏதோவொரு வகையில் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவையாகவே இருந்துள்ளன.
இந்தக் கிழையில் நினைவுகூரத்தக்க சம்பவங்கள் நிறைய.
என் கிழமையை, கவிஞர் நாவண்ணன் அவர்களின் இறப்புச் செய்தியுடனேயே தொடக்க வேண்டியதாகப் போய்விட்டது.
அன்னை பூபதி நினைவுநாள்.
நாட்டுப்பற்றாளர் நாள்.
மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய நாள்.
பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட நாள்.
யாழ் குடாநாடு மீது சூரியக்கதிர்-2 எனப்பெயரிட்டு தாக்குதல் தொடங்கப்பட்ட நாள்.
ஆனையிறவு வெற்றிநாள்.
என்பன இக்கிழமையில் வந்த முக்கிய நாட்கள்.
நாளை, (24.04) தீச்சுவாலை முறியடிப்பு நினைவுநாள்.
என் நட்சத்திரக் கிழமையில் இவற்றைப் பற்றி எழுத முடிந்தது ஒருபுறம் நிறைவைத் தருகிறது. ஆனால் முழுமையான பதிவுகளைத் தரமுடியாமைக்கு வருத்தமுமுண்டு.
இம்முறை சில பாடல்களைத் தரவேற்றி ஒலிக்க விட்டேன்.
அக்கோப்புக்கள் வேலை செய்கிறதா இல்லையா என்றுகூட என்னால் அறிய முடியவில்லை. சரியாக வேலை செய்திருக்கும், உங்களிற் பலர் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
******************************
சந்தர்ப்பமளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், இதற்குக் காரணமாயிருந்த அந்தப் பெயர் தெரியாதவருக்கும் நன்றி.
மீண்டும், இக்கிழமையில் 'ஆதரவளித்த' அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி.

Labels: அலட்டல், நட்சத்திரம், பதிவர் வட்டம், பதிவுகள்
Comments:
<< Home
உங்கள் நட்சத்திரப் பதிவுகள் நன்றாக இருந்தன.
நிறைய விஷயங்களைப் பற்றிய 'முன் அறிவு' இல்லாததால்
புரிந்து கொள்ள எனக்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது.
ஆனாலும் இவைகளைப் பற்றிக் கொஞ்சமாகவேனும் தெரிந்து
கொள்ள முடிந்தது. நன்றி.

வன்னியன், தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் பதிவுகள் ஈழத்தின் காயங்களையும் வீரத்தையும் உணர்ச்சிகளையும் உணர வைத்தன. துளசி அவர்கள் கூறியது போல ' முன்னறிவு' இல்லாததால் வரலாறு முழுவதும் புரிந்து கொண்டோமா என்று தெரியவில்லை. குறைந்தது வன்னியும் யாழும் இரு வட்டாரங்கள், மொழிவழக்கிலும் கலாசாரத்திலும் மாறுபட்டவை என்பது பதிந்தது..
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]