Tuesday, April 25, 2006

இலங்கையில் மீண்டும் போர்?

சிறிலங்கா முப்படைத் தாக்குதலில் 13 பேர் பலி.
(தரவேற்றப்பட்டது)

இன்று இலங்கை நிலைமை மோசமடைந்து விட்டது.
நண்பகல் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் (தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது) இராணுவத்தினரில் எண்மர் கொல்லப்பட்டனர், இராணுவத்தளபதி சரத் பொன்சேகா உட்பட 27 பேர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பின் மாலை திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தியுள்ளன. சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளன. அத்தோடு கடற்படையினரும் பீரங்கித்தாக்குதலை இப்பகுதிகள் மீது நடத்தியுள்ளனர்.
தரையிலிருந்தும் எறிகணைத்தாக்குதல்கள் விடுதலைப்புலிகளின் பகுதி மீது நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஒரு நிழல்யுத்தம் நடந்து வந்துகொண்டிருந்தது. டிசம்பர் அனர்த்தங்களின் பின் சற்று ஓய்ந்திருந்த பிரச்சினை கடந்த ஒரு மாதமாக மீண்டும் தொடங்கியது. படையினரின் மீதான கிளைமோர் தாக்குதல்களும், புலிகளின் மீதான கிளைமோர் தாக்குதல்களும் நடந்த அதேவேளை, படையினரால் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வந்தனர்.

கொழும்பில் நடந்த தாக்குதலும், விடுதலைப்புலிகளின் பகுதிமீது வான்தாக்குதலுட்பட நடத்தப்பட்ட முப்படைத் தாக்குதலும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
*************************

திருகோண மலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரண்டாவது நாளாகவும் புதன்கிழமை காலை வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்தாக்குதலும் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வீசிய குண்டொன்று முஸ்லீம் கிராமம் ஒன்றின் மீதும் வீழ்ந்துள்ளது.

***********************
இதேவேளை செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் வைத்து பிரபல தமிழ் மருத்துவர் அருளானந்தம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
**********************
தொடர்புள்ள செய்திகள்:
SRI LANKA VIOLENCE ESCALATES
12 bodies of civilians recovered from Muttur east
Moulavi killed, 8 wounded in Wednesday Kfir strike

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: theevu

ம் புலிகளுக்கு பொல்லு கொடுக்கிறார்கள்.
-theevu-

17.19 23.4.2006
 
சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப்புலிகளின் பகுதி மீதான தாக்குதலை வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது.
 
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரின் செய்தி.
 
12 bodies of civilians recovered from Muttur east

[TamilNet, April 26, 2006 03:20 GMT]
Initial reports from Muttur east in Trincomalee district Wednesday morning said at least twelve bodies of Tamil civilians including men, women and children killed in Tuesday evening air strike by Kfir jets, and artillery attack by Sri Lanka Navy (SLN) and Sri Lanka Army (SLA) were recovered from Muttur east area. More casualties are expected from Tuesday attack by government troops, a NGO source in the affected area said.
The Sri Lanka Air Force (SLAF) launched air strike on several villages in the LTTE held Muttur east village Tuesday evening following the bomb attack on Lt.General Sarath Fonseka, Commander of the Sri Lanka Army (SLA) in Colombo.
 
எழுதிக்கொள்வது: st

முஸலீம் கிராமம் மீது விழுந்த விமானப்படையின் குண்டுகளால்5 முஸ்லீம்கள் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பூர் மருத்துவ மனையில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சமாதான காலத்தில் மருந்துபக் பொருக்களை சேமித்து வைத்திருந்தால் இந்த நிலை ஏற்படுமா?? காயப்பட்டவர்கள்pல் எத்தனை பேர்கள் இழப்பைச் சந்திக்கின்றனோ என்று நினைக்க கவலையாக இருக்கின்றது.

10.38 26.4.2006
 
திருகோண மலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரண்டாவது நாளாகவும் புதன்கிழமை காலை வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்தாக்குதலும் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வீசிய குண்டொன்று முஸ்லீம் கிராமம் ஒன்றின் மீதும் வீழ்ந்துள்ளது.

***********************
இதேவேளை செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் வைத்து பிரபல தமிழ் மருத்துவர் அருளானந்தம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
**********************
தொடர்புள்ள செய்திகள்:
SRI LANKA VIOLENCE ESCALATES
12 bodies of civilians recovered from Muttur east
Moulavi killed, 8 wounded in Wednesday Kfir strike
 
hi pootajam,thenijil patunkal enthija ennasolli etukkinrathu enru.valamaijai vida melathika kavananathai elankai meethu kaadukinrathu.petumpalum enthija padaikal elankaikul vata etkkinrana.eppoothu thoddilaijum aaddi pulikalai kondu pillaijajum killi vidukinrarhu enthija.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]