Thursday, May 25, 2006

புலிகளின் இன்னொரு தளபதி இறப்பு.

நேற்று (24.05.06) புலிகளின் இன்னுமொரு முக்கிய தளபதி சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீரமணி எனப்படும் இவர் தவறுதலான வெடிவிபத்தில் சாவடைந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை புலிகளின் உயர்மட்ட தளபதியான கேணல் இரமணன் எதிரிகளால் பதுங்கிச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். புலிகள் இயக்கத்தில் கேணல் நிலையில் இறந்த நான்காவது தளபதி இவராவார். எனினும் பொதுவாக ஊடகங்களில் அதிகம் பிரபலமில்லாத தளபதி இவர்.

நேற்று தவறுதலான வெடிவிபத்தில் சாவடைந்த வீரமணி புலிகளின் முக்கியமான போர்த்தளபதி. நிறைய களங்கள் கண்டவர். நிறைய களங்களை வழிநடத்தியவர். ஓரளவு பிரபலமானவர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவிற் கடமையாற்றி லெப்.கேணல் சேகரின் வீரச்சாவின்பின் அப்படையணிச் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டவர். வடபோர் முனையில் நடந்த பல சமர்களைத் தலைமை தாங்கி நடத்தியவர். சிறிலங்கா இராணுவத்தின் இறுதிப் பெருநடவடிக்கையான தீச்சுவாலையை முறியடித்த சமரில் முக்கியமான தளபதியாகச் செயற்பட்டவர்.
பின் வடமுனைப் போரரங்கின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் இளவயதிலேயே திறமைகளை வெளிப்படுத்தி உயர் நிலையை அடைந்தவர்.

குறிப்பிட்ட சில நாட்களுள் புலிகளுக்கு இரண்டாவது பெரிய இழப்பு.

இத்தளபதிகளுக்கு வீரவணக்கம்.

*******************
புதினத்தில் வெளிவந்துள்ள விவரம்:

கேணல் வீரமணி 1990 ஆம் ஆண்டு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் கைப்பற்றப்பட்ட தாக்குதல்,

1991 இல் வவுனியா சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்கள்,

ஆகாய கடல் வெளிச்சமர், மின்னல் எதிர்த்தாக்குதல், வன்னி விக்கிரம 1,2,3 எதிர் நடவடிக்கைகள்,

1992 இல் நடந்த கட்டைக்காடு சிறிலங்கா படைமுகாம் தகர்ப்பு தாக்குதல் வேவு நடவடிக்கை,

1993 இல் நடந்த தவளை நடவடிக்கைக்காக பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கைகள்,

1995 இல் நடந்த ராம்சக்தி எதிர்நடவடிக்கை,

திருகோணமலை படை முகாம்கள், காவல்துறை நிலையங்கள் மீதான தாக்குதல்கள்,

சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையில் வேவுப்பணி,

1997 கிளிநொச்சி படைமுகாம் மீதான வேவு நடவடிக்கைகள்,

மன்னார் படைமுகாம்கள் மீதான தாக்குதல்கள்,

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், வேவு நடவடிக்கைகள்,

1998 இல் நடந்த பரந்தன் கிளிநொச்சி படையினர் மீதான ஊடறுப்புத்தாக்குதல்,

ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை,

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை,

1999 இல் வவுனியா படைநிலைகள் மீதான வேவு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.

லெப். கேணல் வீரமணி ஒயாத அலைகள் - 03 இல் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட்ட பகல் நேரத்தாக்குதலில் ஊடறுப்பு அணிப்பொறுப்பாளராக விளங்கினார்.

2000 ஆம் ஆண்டில் முகாவில் முன்னரங்க நிலைப்பொறுப்பாளராக செயற்பட்டார்.

ஆனையிறவுத் தளம் வெற்றிகொள்ளப்பட்ட தாக்குதலில் அணிகளின் பொறுப்பாளராக விளங்கினார். ஓயாத அலைகள் - 04 நடவடிக்கையிலும் முனைப்பாக வீரமணி செயற்பட்டார்.

அதன்பின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதியாக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

தீச்சுவாலை முறியடிப்புச்சமரில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இறுதியாக நாகர்கோவில் களமுனைத்தளபதியாக லெப். கேணல் வீரமணி செயற்பட்டு வந்தார்.

Labels: , ,


Comments:
துயரம் தரும் செய்திகள் :-(.
 
ஈழத் தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இது. எம்மினத்தின் விடுதலைக்காய் தன் இன்னுயிரை வித்தாக்கிய வீரவேங்கை வீரமணிக்கு என் வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலியும்.
 
இவருடைய விபத்து மரணத்துக்கும்,இரமணனின் கொலைக்கும் ஏதோவொரு உறவு நிலவுகிறது.உண்மை மிக விரைவாக...

எதுவெப்படியோ,இதுவும் கவலைதரும் நிகழ்வே!
 
எழுதிக்கொள்வது: ரவி

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகி

11.17 29.5.2006
 
எழுதிக்கொள்வது: Vaa.Manikandan

இழப்புகள் கொடூரமானவை. இந்த ஒரு கணத்தில் இவை போன்ற இழப்புகள் தாங்கிக் கொள்ள முடியாதவை. வீர வணக்கம்.

14.28 31.5.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]