Saturday, July 29, 2006

தொடரும் வான்தாக்குதல்: 15 புலிகள் பலி

நான்காம் நாளாக தொடர்ந்து சிறிலங்கா வான்படையால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வன்னி, திருகோணமலை என்று நடைபெற்ற தாக்குதல்கள் இன்று மட்டக்களப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு கரடியனாறில் அமைந்துள்ள 'தேனகம்' சந்திப்பரங்கம் மீது வான்படை நடத்திய தாக்குதலில் எட்டுப் போராளிகள் பலியாகினர், மேலும் சிலர் காயமடைந்தனர். நேற்று திருகோணமலையில் நடத்திய வான்தாக்குதலில் ஏழு புலிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

கரடியனாறில் அமைந்திருந்த தேனகம் என்ற மாநாட்டு மண்டபம் பிரசித்தமான சந்திப்பிடம். சர்வதேசப் பிரதிநிதிகளுடனும், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடனும், பத்திரிகையாளர்களுடனும் நடைபெறும் சந்திப்புக்கள் இங்குத்தான் நடைபெறும்.
கிளிநொச்சியில் சமாதானச் செயலகம் போல கிழக்கின் முக்கியமான புலிகளின் அரசியல் மையம் தான் இந்த "தேனகம்".
அதன்மீதே தாக்குதல் நடத்திவிட்டது அரசபடை.
இரு நாட்களில் பதினைந்து புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர்.

இத்தாக்குதலு்ககு முன்பாக 'நடைபெறும் வான்தாக்குதலுக்கு தகுந்தபதிலடி கொடுக்கப்படும்' என்று புலிகள் அறிவித்திருந்தனர். தேனகம் மீதான தாக்குல் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
ஏற்கனவே மக்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குலி்ல் பல சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பாடசாலை ஒன்றும் திருகோணமலைத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.

யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவால் முடிந்தது 'இதுவொரு ஒப்பந்த மீறல்' என்ற அறிக்கை மட்டுமே. சர்வதேசத்தால் முடிந்ததும் அதுதான். (அதைக்கூட யாரும் செய்யப்போவதில்லை) தாக்குதலுக்கான பதிலடியை கடுமையாக்குவதுதான் தமிழர் தரப்பிலுள்ள ஒரேவழி.

கொஞ்சநாளாக அடங்கிப்போய்க் கிடந்தவர்களுக்கு, இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதைப் பார்த்ததும் குஷி வந்துவிட்டதோ என்னவோ?
புலிகளும் பொறுத்திருந்தால் நாங்களும் கவசவாகனங்களுக்குக் கல்லெறிஞ்சு கொண்டு திரியவேண்டியதுதான்.

கடுமையான பதிலடியொன்றுடன் சற்று அடங்கிப் போகலாம். அல்லது ஒரு மாதத்துள் யுத்தம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிடுமென்றே தோன்றுகிறது.

Labels: ,


Comments:
பலமான பதிலடியோ யுத்தமொன்றோ நிகழ்வதற்கான் சாத்தியம் இருப்பதாக நம்புகிறீர்களா வன்னியன்?

என்னால் அப்படி நம்ப முடியவில்லை.

இந்த முறை மாவீரர் தினத்திலும் "பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு" என்ற வார்த்தைகளைத்தானெ கேட்கவேண்டிவருமோ என்னவோ..
 
சிறீ லங்கா தன்னை இஸ்ரேல் போல கற்பனை செய்ய முயற்சிக்கிறது. சிரிப்புத்தான் வருகிறது. ஒரேயடியாக அலறும் போது உணர்வார்கள் தாம் உண்மையில் யாரென்பதை (நொண்டிச் சிங்கம் என்பதை)
 
மயூரன், அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மயூரன்,
சாத்தியமிருப்பதாகவே நம்புகிறேன்.
கடந்தமுறை வான்தாக்குதலுக்கான எச்சரிக்கையைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதலொன்று முயலப்பட்டு நின்று போனது. பன்னாட்டுத் தடைகளுள் இருமுறை கொழும்பில் இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்திவிட்டார்கள்.
புலி களைத்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.
கண்காணிப்புக்குழுவில் 3 நாடுகளை வெளியேற்றுவதில் அவர்களின் பிடிவாதம் இன்னும் நிறைய நம்பிக்கையைத் தருகிறது.

இம்முறை ஒரு பதிலடியின் பின் மீண்டும் அமைதியாயிருப்பதைவிட ஒரேயடியாக பாய்வதைப் புலி தெரிவுசெய்யும்.

நீங்கள் சொல்வதுபோல் மாவீரர் தின உரை இருந்தால் வடிவேலு கதைப்பது போலாகிவிடும்.

அதுசரி, திருமலையின் நீர்வழங்கற் பிரச்சினை பற்றி நீங்கள் ஏன் பதிவு போடவில்லை? அதுபற்றி அறிய ஆவல். ஓரிரு நாட்களுள் அரசாங்கம் இந்தக்குதி குதிக்குமளவுக்கு அரசை அது பாதித்துள்ளதா?
இவ்வளவு காலமும் ஆண்டுக்கணக்காக பொருளாதாரத் தடைக்குள்ளும் மின்சாரத் தடைக்குள்ளும் வாழ்ந்த மக்களின் நியாயமான போராட்டமாக இது படுகிறது. உங்கள் பார்வையில் ஒரு பதிவு போடலாமே.
___________________________
அனானி,
அவர்களைப் பார்த்துத்தான் இவர்களுக்கும் குஷி வந்ததோ என்னவோ?
 
என்ன வன்னி, மகிழ்ச்சியான செய்தியை கவலையான செய்தி போல சொல்லியுள்ளீர்கள். இத் தாக்குத்லகள் மூலம் புலிகளின் வலைக்குள் சிங்கள அரசு வீழ்ந்துள்ளது. உங்களுக்கு நினைவிருக்குதோ தெரியாது, யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் தலைவர் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். தமிழர் தரப்பு யுத்த நிறுத்தத்தை முறிக்காது. அதேநேரம் சிங்கள தரப்பு யுத்த நிறுத்தத்தை முறிக்கும் பட்சத்தில் நாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என தெளிவாகச் சொல்லியிருந்தார். இப்போது தமிழர்தரப்பு எந்த ஒரு தாக்குதலையும் நடத்தாத போதும், சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் குண்டு போடுகிறது. எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு சிங்கள அரசே உதவி செய்கிறது. இனி என்ன , வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் சிங்கள அரசு இத் தாகுதல்களுக்கான வினையை வட்டியுடன் வாங்கிக் கொள்ளும். உண்மையில் இத் தாக்குதல் சிங்கள அரசு புலிகளின் வலைக்குள் வீழ்ந்துவிட்டதையே காட்டுகிறது.
 
நாளை அல்லது நாளை மறுநாள் திருமலை போகிறேன்.
அங்கே விபரங்களை அறிந்துகொள்ளக்கூடியதாய் இருக்கும்.

இந்த நீர் பிரச்சனையில் சிங்கள-தமிழ் பிரச்சனையை தாண்டி பன்னாட்டு தலையீடு ஒன்று இருப்பதாக ஒரு ஊகம் உண்டு.

ஐரோபிய ஒன்றியத்தின் தடையை புலிகள் கையாண்ட விதம் பாராட்டத்தக்க சிறப்பான இராஜதந்திரம்.
 
மயூரன்,
பின்னூட்டத்துக்கு நன்றி.
உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

வெற்றி,
அரசு வலையில் விழுகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தால் என்னவாவது? இது எத்தனையாவது முறை? சும்மா கொடுத்துக்கொண்டிருப்பதற்கு நாங்களேதோ பெரிய எண்ணிக்கையிலுள்ள இனமன்று.
மூன்றரை வருடங்களின் முன்பு நெடுந்தீவுக்கு அண்மையாக லெப்.கேணல் ஆற்றலோன் உட்பட 3 பேர் வீரச்சாவடைந்ததிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதன் பின் அடுத்தடுத்து இரண்டு கப்பல்கள் தகர்க்கப்பட்டதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் அனியாயமாகத்தான் கொல்லப்பட்டார்கள். (புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பதுங்கித்தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களை விட. அந்தக்கணக்கை பதிலுக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்)

அடுத்ததாக பதிலடி கொடுப்பதாக இருந்தால் உடனேயே கொடுப்பதுதான் சரி. பதிலடியின் நியாயப்பாடும் அப்போதுதான் வெளிப்படும். எல்லாத்தையும் ஆறப்போட்டுவிட்டு பிறகொரு நேரம் இதைப்பற்றிக் கதைப்பது பலனில்லை.
கேணல் ரமணனின் கொலைக்குப் பதிலடியென்ற பேரில் இப்போது ஒரு தாக்குதல் செய்தால் எப்படியான கோமாளித்தனமாக இருக்கும்?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]