Friday, February 18, 2005
அவசர உதவி...
முந்தி (90 இன் ஆரம்பத்தில்) யாழ்ப்பாணத்தில சிங்கள அரசு குண்டு போடுறதுக்கு Y-08, Y-12 எண்ட விமானங்கள பயன்படுத்தினது. அதுகள் போடும் குண்டுகள் வித்தியாசமாயிருந்தது. மனிசரக் கொல்லுறது, பயப்படுத்திறது மட்டுமில்லாமல் வேற அரியண்ட வேலையளையும் அந்தக் குண்டுகள் செய்யும். மலம் அள்ளியந்து கொட்டுறான் எண்டு அப்ப சனம் கதச்சது. நானும் ரெண்டு மூண்டு முற அதுக்க மாட்டுப்பட்டிருக்கிறன். நாத்தமெண்டா அப்பிடித்தான் ஒரு நாத்தம். ஆனா அது உண்மையில மலமோ இல்லாட்டி அப்பிடி நாத்தம் தாற இரசாயனம் ஏதும் கலந்து குண்டு செய்யிறவனோ தெரியேல. ஆனா தாங்கேலாத அவஸ்தை.
இப்ப என்ர சந்தேகத்துக்கு வாறன். அந்த குறிப்பிட்ட ரெண்டு விமானத்துக்கும் எங்கட சனம் "சகடை" எண்டு பேர் வச்சுதுகள். (சின்னச் சகடை, பெரிய சகடை). ஏன் அந்தப்பேர் வந்தது எண்டு இண்டை வரைக்கும் தெரியாது. ஏதாவது காரணம் இருக்கத்தான் வேணும். ஆனா அதப்பற்றி அப்பவும் சரி அதுக்குப்பிறகும் சரி ஆராயவேயில்லை. இப்ப இந்தப் பேர் ஆராய்ச்சிக்கு அவசியம் வந்திட்டுது. நேற்றுப் பாத்த திருப்பாச்சி படத்தில "சனியன் சகடை" எண்டு வில்லனொருவன் வாறான். (வாற வில்லனுகளுக்குள்ள முதன்மை வில்லன் அவன்தான்) அவனுக்குப் பாருங்கோ அந்த "சகடை" எண்ட பேர் பாவிச்சிருக்கிறாங்கள். அந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் எண்டு அறிய ஆவலாயிருக்கு. வில்லனுக்கு வச்சபடியா அந்தச் சொல்லிண்ட விளக்கமும் எங்கட சனம் விமானத்துக்கு வச்ச பேரின்ர விளக்கமும் ஒத்துப்போகலாம். சகடை எண்ட சொல் தமிழ்நாட்டிலயும் பாவிக்கினம் எண்ட உடன அதப்பற்றியறியிற ஆவல் வந்திட்டுதுங்கோ.
இப்ப இது அவசரமான, அவசியமான (தலைப்புப் பொருந்தீட்டுது தானே) ஆராய்ச்சியா இருக்கிறதால வலைப்பதியும் மொழியறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் (வலைப்பதியிற எல்லாருமே இதுக்குள்ள அடக்கம்) இதுக்கு உதவ வேணுமெண்டு கேக்கிறன். படம் போட்டு ஆராய்ச்சி பண்ணுற ஆக்களும் தான். (என்ன அவசரமெண்டு ஆரென் கேட்டா இதுசம்பந்தமா புத்தகமொண்டு எழுதிறன் எண்டு சொல்லலாம்).
நன்றி.
-வன்னியன்-

Labels: அனுபவம், பதிவர் வட்டம்
Comments:
<< Home
எழுதிக்கொள்வது: Eelanathan
வன்னியன் கோவிலிலை திருவிழா பார்த்ததில்லையோ.அதிலை சப்பறத்திருவிழா என்றொரு திருவிழா வரும்தானே அந்த சப்பறத்தை ஒரு வாகனத்தில் வைத்துத் தள்ளிக்கொண்டு போவார்கள்.அதன் பெயர் சகடை.பெரிய உருப்படியான உருவம் காரணமாக விமானத்துக்கும் அந்தப் பெயரே வைத்துவிட்டார்கள்.நீங்கள் சொல்லுறது சகடை,சீனச்சகடை விமானங்களை என நினைக்கிறேன்.
17.43 19.2.2005

ஈழநாதனுக்கு நன்றி.
நான் திருவிழாக்களுக்கு விடுப்புப் பாக்கப்போயிருக்கிறன். ஆனா உந்த விசயங்கள் தெரியாது. ஏனெண்டா நான் இந்துவல்ல. நீங்கள் சொன்ன மாதிரி சீனச்சகடை எண்டும் சொல்லறத கேள்விப்பட்டனான். ஆனா ரெண்டுமே சீனத்தயாரிப்பெண்டுதான் நினைக்கிறன். சின்னன் பெரிசு எண்டுதான் நாங்கள் கதைக்கிறது. சரி இந்தியாவில என்ன அர்த்தம் இதேதானோ? இல்ல இதுவும் சாதாரணமா ஒரு பேர் தானோ?
-வன்னியன் -

இது கோயில்களில் பயன் படுத்தும் 4 சில்லு ஊhதி உருவத்தில் பெரியதாக இருப்பதால் அப்பெயர் என நினைக்கிறேன்.
குழைகாட்டான்
Post a Comment
குழைகாட்டான்
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]