Tuesday, March 08, 2005
அவர்கள் பார்வையில்... –மகளிர் தினக் கவிதை.
          வணக்கம்!
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈழத்துப் பெண்கவிஞை ஒருத்தியின் கவிதையொன்றைப் பதிகிறேன். இது 1987 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” எனும் தொகுப்பில் “அ.சங்கரி” இன் கவிதையொன்று.
அவர்கள் பார்வையில்
எனக்கு
முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவுமில்லை.
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமையாகும்.
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கு
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரை
இதுவே வழக்கம்.
          
Labels: ஈழ இலக்கியம், கவிதை
	
			Comments:
      
<< Home
				
				எழுதிக்கொள்வது: பொடிச்சி
வன்னியன் கவிதைக்கு நன்றி. ஈழப் பெண்கள் மீது பாதிப்பைச் செலுத்திய தொகுப்பொன்றிலிருந்து தந்திருக்கிறீர்கள். அ.சங்கரிதான் சித்ரலேகா மெளனகுரு என நினைக்கிறேன்.
8.40 8.3.2005
				
			வன்னியன் கவிதைக்கு நன்றி. ஈழப் பெண்கள் மீது பாதிப்பைச் செலுத்திய தொகுப்பொன்றிலிருந்து தந்திருக்கிறீர்கள். அ.சங்கரிதான் சித்ரலேகா மெளனகுரு என நினைக்கிறேன்.
8.40 8.3.2005
				
				எழுதிக்கொள்வது: muulai
இல்லவே இல்லை சித்ரலேகாவும் சங்கரியும் ஒருவரே அல்ல.எனினும் இது நல்ல கவிதையே.
21.27 8.3.2005
				
			இல்லவே இல்லை சித்ரலேகாவும் சங்கரியும் ஒருவரே அல்ல.எனினும் இது நல்ல கவிதையே.
21.27 8.3.2005
				
				வன்னியன் அருமையான கவிதை,பதிவுக்கு நன்றி.கவிஞை என்ற சொல் பொருத்தமாக இல்லை கவிஞர் என்றே சொல்லலாமே அல்லது கவிதாயினி
				
				எழுதிக்கொள்வது: எனக்குத் தெரிந்து சித்ரலேகா மௌனகுருதான் சங்கரி.  நல்ல கவிதை.
எனக்குத் தெரிந்து சித்ரலேகா மௌனகுருதான் சங்கரி. நல்ல கவிதை.
23.47 8.3.2005
				
			எனக்குத் தெரிந்து சித்ரலேகா மௌனகுருதான் சங்கரி. நல்ல கவிதை.
23.47 8.3.2005
				
				எழுதிக்கொள்வது: வன்னியன்
நன்றி ஈழநாதன் பொடிச்சி விஜய் மற்றும் அனோனிமஸ். எனக்கு இரண்டுபேரையுமே தெரியாது என்பதால் இதில் கலந்துகொள்ளவில்லை. ஈழநாதன்! இருபாலாரையும் குறிக்கும் சொல்லையே பயன்படுத்த எண்ணிணேன்.
-வன்னியன்-
19.24 9.3.2005
				
கவிஞர் என்ற பதம் தான் பாவித்துவந்தேன் நேற்று பொடிச்சியின் பதிவைப் பார்க்கும்வரை. அதன்பின் மாறிவிட்டேன். மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?...
				
			Post a Comment
            கவிஞர் என்ற பதம் தான் பாவித்துவந்தேன் நேற்று பொடிச்சியின் பதிவைப் பார்க்கும்வரை. அதன்பின் மாறிவிட்டேன். மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?...
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Comments [Atom]