Saturday, January 14, 2006

தைத்திருநாள் திருவிழா நிகழ்ச்சிகள்.

கிளிநொச்சியில் இன்று காலை தொடங்கப்பட்ட தமிழர் திருநாள் வெகு விமரிசையாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை தொடங்கப்பட்ட இவ்விழா விடுதலைப்புலிகளின் நிதித்துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பண்பாட்டு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. தமிழரின் பாரம்பரிய கலைகள் இதில் இடம்பெற்றன.


தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்விழாவில் இன்று இரவு நிறையக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஈழத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலைஞர்கள் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பிக்கின்றனர்.

-------------------------------
செய்திகள், படங்கள்: புதினம், சங்கதி.
-------------------------------
மேலதிக செய்திகளுக்கும் படங்களுக்கும் செல்ல,
புதினம்
சங்கதி


---------------------------------------------

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

ஒரு சமுதாயத்தின் இருப்பே அதன் பண்பாட்டு வாழ்வில் தங்கியிருக்கிறது.இங்கே பண்பாடென்பது வெறும் புறநிலை சார்ந்து சொல்லப்படவில்லை.பண்பாடென்பது எமது பொருள் வாழ்வேடு சேர்ந்த அகப் புறக் கலாச்சார வாழ்வின் அர்த்தத்தில் எடுக்கவுமஇ.இவ் நோக்கில் எங்கள் -உழவர்களின் திருநாளான பொங்கலைச் சிறப்பாகவும்,தேசிய விழாவாகவும்கூடக் கொண்டாடலாம்.இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இன்னும் ஆவல் மேலிடுகிறது.

19.47 15.1.2006
 
கருத்துக்கு நன்றி சிறிரங்கன்.
இவ்விழா பற்றிய முதலாவது அறிவிப்பில், "தமிழர் தேசியத் திருநாள்" என்றுதான் இருந்தது. (நானறிய 2003 ஆம் ஆண்டின் பொங்கலே இப்பெயரோடுதான் வன்னியிற் கொண்டாடப்பட்டது) பிறகேனோ மாற்றப்பட்டுவிட்டது. ஏனென்று தெரியவில்லையென்றாலும் சில சிக்கல்களை ஊகிக்க முடிகிறது.

"தமிழர் தேசியத் திருநாள்" என்று புலிகளால் அறிவிக்க முடியாது. ஈழத்தின் சார்பாக அறிவிக்க அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் தமிழினத்தின் பெரும்பான்மை தமிழகமல்லவா?
ஆக, இப்படியான விதயங்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. ஆனால் இப்படிப்பார்த்தால் நடைபெறாது என்பதில் எனக்கு 100 வீதமான நம்பிக்கையுண்டு. ஆக, இது காலாகாலத்துக்கும் வெறும் "தைப்பொங்கல்" தான்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]