Saturday, April 22, 2006
டப்பாங்கூத்துப் பாடல்கள்
          ************நட்சத்திரப் பதிவு -12************
ஜெயசிக்குறு தொடங்கப்பட்டதின் பின்பு வன்னியில் தெருக்கூத்து அல்லது வீதிநாடகங்கள் எனப்படும் கலை மிகப்பரந்தளவில் எழுச்சி பெற்றது. புலிகளின் மிகமுக்கிய பரப்புரை ஊடகமாக அது இருந்தது. மக்கள் கலைஞர்களாலும், போராளிக் கலைஞர்களாலும் இவை அரங்கேற்றப்பட்டன. ஒலிபெருக்கிகள் ஏதுமின்றி நேரடியாகவே மக்களுடன் பேசும் நாடகங்கள் இவை.
இவை பற்றி சிறியதொரு பதிவை நட்சத்திரக் கிழமையில் எழுதலாமென்று நினைத்திருந்தாலும் முடியவில்லை.
இவ்வாறான வீதி நாடகங்களின் போது சில பாடல்கள் பாடப்பட்டன. அவைகள் பின் ஒலித்தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
அப்படி வந்த பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.
"டப்பாங்கூத்து பாட்டுத்தான்"
இப்பாடலைப் பாடியவர் 'குட்டிக்கண்ணன்' என்ற இளங்கலைஞர். அப்போது பத்தோ பதினொன்றோ தான் அவரது வயது.வன்னியெங்கும் சுழன்று திரிந்து பாடல்களைப் பாடுவார். நல்ல குரல் வளமுடையவர்.
"புலியாட்டம் ஆடு
பூபாளம் பாடு"
இதுவும் வீதி நாடகங்களில் பாடப்பட்டு மிகப்பிரபல்யமான பாடல்.
பாடியவரின் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஆளை நன்றாக ஞாபகம் இருக்கிறது.
புலம்பெயர்ந்தவர்கள் சிலருக்குக்கூட இப்பாடலை நேரடியாகக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
          
Labels: ஈழ இலக்கியம், கவிதை, நட்சத்திரம்
	
			Comments:
      
<< Home
				
				எழுதிக்கொள்வது: kulakaddan
1990 களின் ஆரம்பத்தில் யாழில் பார்த்த தெருக்கூத்துகளை தவிர்பிறகு போராட்டம் சம்பந்தமான எந்த தெருகூத்துக்களையும் பாத்ததில்லை.
நீங்கள் இணைத்திருக்கும் முதலாவது பாடல் கேட்டிருக்கிறேன் புலம் பெயர்ந்த பின்......
14.31 23.4.2006
				
				வன்னியன் 
பாடல்களை என்னால் கேட்க முடியவில்லை.
கவிஞர் நாவண்ணன் அவர்கள் தான் வீதி நாடகங்கள் செய்வதாக ஒரு தரம் சொன்னார்.
அவை பற்றியும் எழுதுங்களேன்.
				
				வரவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
சந்திரவதனா,
ஒலிக்கோப்புக்கள் ஏன் வேலை செய்யவில்லையென்று தெரியவில்லை. இன்னும் எவரும் அப்படிச் சொல்லவில்லை. கேட்டார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் நான் அடிக்கடி எல்லாக் கோப்புக்களையும் சோதித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
மற்றப் பதிவுகளிலுள்ள கோப்புக்கள் கேட்கக் கூடியதாக இருக்கிறதா?
நான் பார்த்த, அறிந்த வீதி நாடகங்களில் கவிஞர் நாவண்ணின் நாடகமேதுமில்லை.
ஆனால் கவிஞர் மிகப்பெரிய மேடை நாடகமொன்றை எழுதி இயக்கியுள்ளார். வன்னியில் மிகப்பிரபலமடைந்தது அந்நாடகம்.
				
			Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Comments [Atom]