Tuesday, April 25, 2006

தொடரும் தாக்குதல்கள்.

முப்பதாயிரம் வரையான மக்கள இடப்பெயர்வு.

திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது இரண்டாவது நாளாக அரசடையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்)மாலையும் இன்று (புதன்)காலையும் நடத்தப்பட்ட வான்தாக்குதலிலும், தொடர்ச்சியாக நடத்தப்பட் கடற்தாக்குல், மற்றும் எறிகணை வீச்சுக்களினாலும் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நிறையப்பேர் காயமடைந்துள்ளதாகவும், சம்பூர் மருத்துவமனையில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களினால் முப்பதாயிரம் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனரென்றும் அவர்களைப் பராமரிக்கும் பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டால், பதிலுக்குத் தற்காப்புத் தாக்குதல் நடத்தவேண்டிய நிலைவருமென புலிகள் அறிவித்துள்ளனர்.

Labels: ,


Comments:
நிலமை நாளாந்தம் மோசமாகி கோண்டே வருகிறது.....
இவ்வளவு இழுத்தடிப்புக்களின் பின்... 2 நாள் தாகுதலினை தொடுத்தபின்னும் இன்னும் போர் நிறுத்தம் தொடருவதாக அரசு சொல்வது தான் நல்ல வேடிக்கை..
 
எழுதிக்கொள்வது: கார்த்திக்

அந்த நாட்டின் தலைமைத் தளபதியை கொல்ல முயற்சிப்பது போர் நிறுத்ததை எந்த அளவுக்கு மதிப்பது என்று தெரியவில்லை. தங்கள் தலைமை தலைவரின் கொலை முயற்சிக்கு இந்த எதிர்ப்புக் கூட தெரிவிக்கவில்லை என்றால் சிறிலங்கா தனது இராணுவத்தை கலைத்து விடுவது நல்லது. இதை செய்ததது நாங்கள் இல்லை[புலிகளைப் போல] என்று இராணுவம சொல்ல முடியாது...

21.37 26.4.2006
 
கார்த்திக்,

கொழும்புக் குண்டுவெடிப்பு, யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்தான். அதுமட்டுமல்ல, படையினர் மீது நடத்தப்பட்டும் கிளைமோர் தாக்குதல்களும் யுத்தநிறுத்த மீறல்கள்தான். (புலிகள் மீதும் கிளைமோர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, நடக்கின்றன)

தானே ஊட்டி வளர்த்து ஒட்டுப்படை (துணை இராணுவக் குழு) என்ற பெயரில் மக்கள் மீதும், புலிகள் மீதும் அரசு தாக்குதல் நடத்திக் கொல்லும்போது, 'பொங்கியெழும் மக்கள் படை' என்ற துணைக்குழு தமிழர் தரப்பிலிருந்து வருவது இயல்பான ஒன்று. இன்னும் தங்களுக்கும் ஒட்டுப்படைகளுக்கும் தொடர்பில்லையென்று அரசு மறுத்துவரும் வரைக்கும் புலிகளும் அனைத்துத் தாக்குதல்களையும் மறுக்கத் தான் வேண்டும். (கொழும்புத் தாக்குதல் உட்பட.) அதைக் கேள்வி கேட்க யாருக்கும் தார்மீக அடிப்படை இல்லை.

நிற்க, படையினர் மீதான தாக்குதல்களில் கொல்லப்படுவது படையினர். அதற்குப் பதிலடியாக இராணுவம் யாரைக் கொல்கிறது?
மக்களை. ஏன் புலிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டியதுதானே?
கொழும்புத் தாக்குதலுக்குத்தான் பதிலடியென்றால், ஏன் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்? பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்கிறார்கள்? கொல்லப்பட்ட மக்களைப் பார்த்தீர்களா?

உலகம்கூட இரண்டையும் சமப்படுத்திவிட்டுப் பேசாமல் இருக்கிறது.
அதுமட்டுமன்றி, காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சேவை புறக்கணக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு பேசாமல் தான் இருக்கிறது.

சரி. நீங்களாவது சொல்லுங்கள், எந்தவிதத்தில் கொழும்புத் தாக்குதலும் திருகோணமலை மீதான அரசின் முப்படைத்தாக்குதலும் ஒன்றாகிறது?

இதையே புலிகளும் 'மட்டுப்படுத்தப்பட்ட அளவில்' என்று சொல்லிக்கொண்டு படைநிலைகள் மீது (கவனிக்க இராணுவத்தின் மீதுதான்) தாக்குதல் நடத்தினால் உலகமோ, நீங்களோ சும்மாவா இருக்கப்போகிறீர்கள்? (அவர்கள் தாக்குதல் நடத்தத்தான் போகிறார்கள். அப்போது பாருங்கள் கூத்தை).

அரசு தெளிவாகவே பயங்கரவாதப் போக்கை வெளிக்காட்டுகிறது. எவராவது அதைப் பயங்கரவாதியென்று சொல்லினரா? இராணுவம் கொல்லப்படுவதற்குப் பதிலடி மக்களைக் கொல்வதுதானா? இதுதான் சிங்களத்தின் மனநிலை. இதைத் தெளிவாகச் சொல்ல இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

படையினரால் பொதுமக்கள் தொடர்ச்சியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது, தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சொன்னார் இப்படி:
"இராணுவம் சண்டையைத் தொடக்கினால் யாழ்ப்பாணத்திலுள்ள நாற்பதாயிரம் படையினரின் சவப்பெட்டிகள் கொழும்புக்கு வரும்"

அதற்குச் சிங்களத் தரப்பிலிருந்து என்ன சொல்லப்பட்டது தெரியுமா?
"அப்படி வந்தால் தெற்கில் வாழும் ஒரு லட்சம் தமிழரின் சவப்பெட்டிகளை அனுப்பி வைப்போம்"

இதுதான் சிங்கள மனநிலை. அட பதிலுக்குப் புலியைக் கொல்கிறேன் என்று சொல்ல எவனுக்கும் தோன்றவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்களைக் கொல்வார்களாம் பதிலடியாக.
 
//படையினர் மீதான தாக்குதல்களில் கொல்லப்படுவது படையினர். அதற்குப் பதிலடியாக இராணுவம் யாரைக் கொல்கிறது? மக்களை//

இதையே தான் அன்று இந்திய ராணுவமும் செய்தது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]