Friday, July 14, 2006

சீலன் எனும் ஆளுமை பற்றி பிரபாகரன்.

இன்று மாவீரன் லெப்.சீலனின் 23ஆவது நினைவுதினம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.

நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.

ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகளைத் தரவிறக்கஞ் செய்ய விரும்புபவர்களுக்கு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.

திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.






தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:





சீலனின் விளையாட்டுத்தனங்கள்:





சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:





சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:





தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:






தரவிறக்க விரும்புவோர் இவ்விணைப்புக்களைப் பாவிக்கவும். (ஒவ்வொன்றும் அண்ணளவாக700 KB)
பதிவு ஒன்று
பதிவு இரண்டு

பதிவு மூன்று
பதிவு நான்கு
பதிவு ஐந்து
பதிவு ஆறு

இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.


நன்றி: விடுதலைத் தீப்பொறி-II

Labels: , ,


Comments:
வன்னி,
பதிவுக்கு மிக்க நன்றி.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றி.
 
Best article.You took the pain to put it all in audio format.Anyone wants to understand the relationship our Leader maintain with his fighters and followers should hear the true words in Piraba's voice. Your service towards our Motherland are tremendous.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கரைவாசன்
 
எழுதிக்கொள்வது: CAPital

அன்பான வேண்டுகோள்,

வெறுமனே "பிரபாகரன்" என்று எழுதுவது ஏதோ ஒரு மன நெருடலைக் கொடுக்கிறது.

நீங்கள் "தலைவர்", "மேதகு பிரபாகரன்", "வே. பிரபாகரன்", (அ) "பிரபாகரன் அவர்கள்" என்று எதாவதென்றைப் பாவிக்கலாமே.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

11.13 11.8.2006
 
எழுதிக்கொள்வது: kanagan

பெறுமிக்கவற்றை கோப்பாக்கி இங்கே அளித்தமைக்கு நன்றி.மேலும் மேலும் நல்ல ஆக்கங்களை நீங்கள் இகைக்க வேண்டுகிறோம்

23.10 24.8.2006
 
எழுதிக்கொள்வது: Jayaprabhakar

ஈழத்தமிழர் மாநாட்டில் வை.கோ பேசிய DVD தங்களிடம் இருப்பதாக கூறியிறுந்தீர்கள். அதை இணையத்தில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு ஈழ தமிழர் நலம் விரும்பும் வைகோவின் ரசிகன்.

14.24 26.8.2006
 
கப்பிற்றல், கனகன்,
வருகைக்கு நன்றி.

ஜெயபிரபாகர்,
அப்பேச்சின் சிறுபகுதியை இரு துண்டுகளாகப் பதிவிட்டுவிட்டேன். பார்த்தீர்களா? மிகுதியையும் பதிவிடுவேன்.
கருத்துக்கு நன்றி.

வணக்கத்துடன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]