Tuesday, June 14, 2005

ஈழப்போராட்டக் காரணிகள்.

வணக்கம்!
ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத் தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன முயற்சியிது.

முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்காட்டியும் மற்றவர்களை வந்தேறு குடிகளாகவும் துரத்தப்பட வேண்டியவர்களாகவும் கதை கட்டமைக்கப்பட்டு காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இடையில் இவ்வுணர்வு தொய்யும் போதெல்லாம் யாராவது வந்து எண்ணெய் ஊற்றி எரித்து விடுவார்கள். இன்றும் கூட தங்கள் வரலாற்று நூலாகச் சிங்களவர் அடையாளங்காட்டும் 'மகா வம்சம்' என்ற நூல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

முதலில் மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக அடையாளங்காட்டுதலே சுத்த காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமுமாகும். அப்படிப் பார்க்கப்போனால் இராமாயணம் மகாபாரதங்களைக்கூட யாரும் தமக்கேற்றபடி வரலாற்று நூற்களாகக் கட்டமைத்து எதையும் கதைக்க முடியும். காம வேட்கையுற்ற சிங்கமொன்றினால் உருவாக்கப்பட்டு ஒரே தாய்வயிற்றில் பிறந்த ஆண்-பெண் கூடி உருவாக்கப்பட்ட இனம் தான் இந்தச் சிங்கள இனமென்றும், புத்தரால் அவர்களுக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீவுதான் இந்த இலங்கை என்றும், அவர்களை அங்கே குடியேற்றுவதற்காக 'வாக்களிக்கப்பட்ட' தீவிலிருந்தவர்களை புத்தர் வெருட்டிக் கலைத்தார் என்றும் கதை சொல்கிறது மகாவம்சம். நிறைய மாயாஜாலச் சம்பவங்களைக் கொண்ட இந்நூல்தான் அவர்களின் வரலாற்று நூலாம். (இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பகுதிகளை வன்னியில் வாசித்தேன். முழு மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் வெளியிட்டுவிட்டார்களா தெரியவில்லை. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்)

இதன்பின் அவ்வப்போது தமிழர்களுக்கும் சிங்களவருக்குமிடையில் போர்கள் நடந்தன. போர்த்துக்கேய வருகைவரை தனித்தனி இராச்சியங்கள் இருந்துள்ளன. வெள்ளையரிடம் இறுதியாக இழக்கப்பட்ட இன்றைய மத்திய இலங்கையான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஒரு தமிழன் என்ற தகவல் வியப்பானது.
ஆகவே இந்த இனப்பிரச்சினையின் வேர் ஆயிரமாண்டுகளாக ஊட்டியூட்டி வளர்க்கப்பட்ட இனவெறியில் தங்கியுள்ளது. அதிகம் கிளறாமல் நான் சொல்லவந்த விசயத்துக்கு வருகிறேன்.

ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது எழுபதுகளில், அது முனைப்புப்பெற்றது எண்பதுகளின் தொடக்கத்தில். இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியான வன்முறைகளையும் அழிவையும் சந்தித்து வந்தார்கள். அவ்வப்போது நடந்த இனப்படுகொலைகள் (இனக்கலவரம் என்பது பிழையான சொல்லாடல்) இதற்குச் சான்று. அடக்குமுறைக்கு மொழி முக்கிய மூல காரணியானது. மொழி மூலமே முதன்மையான அடக்குமுறையை எதிர்கொண்டனர் தமிழர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முக்கிய விடயம். (அந்த நேரத்தில் எவன் தமிழனை அதிகமாக வதைக்கிறானோ, அல்லது வதைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறானோ அவனே தேர்தலில் வெல்வான் என்ற நிலையிருந்தது. அதன் உச்சபட்ச தேர்தல் வாக்குறுதியே '24 மணிநேரத்தில் தனிச்சிங்களச் சட்டம்' என்ற தேர்தல் கோசமும் அதைத் தொடர்ந்த வெற்றியும்.)



இந்த நேரத்தில் தமிழ் மாணவர்களை வதைக்கும், தமிழ் மக்களின் கல்வித்திறன் மேல் கைவைக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆயுதப்போராட்டப் பொறி பற்றுவதற்கான முதன்மைக்காரணியும் இதுவே. இச்சட்டம் குறிப்பாக இளம் தமிழ் மாணவரை நேரடியாகப் பாதித்தது. இச்சட்டம் மூலம் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு செய்த மோசடியும், அது எவ்வளவு தூரம் மாணவரைப் பாதித்தது என்பதையும் அது எவ்வாறு ஆயுதப்போராட்டத்துக்கு இட்டுச்சென்றது என்பதையும் அடத்த பதிவில் தருகிறேன்.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இனப்படுகொலைகள் பற்றி இங்கே எழுதத்தேவையில்லையென்று நினைக்கிறேன். சிங்களம் மட்டும் சட்டத்தின் கொடூர முகம் பற்றி வேறு யாரேனும் எழுதுங்களேன். நாங்கள் தான் வயதாற் சிறியவர்கள். புலிவிமர்சனத்தை மட்டும் கருப்பொருளாய் வைத்து பதிவு எழுதும் நேரத்தில் இப்படியாக ஆயுதப்போராட்டத்துக்கு முந்தைய நிலையினையும் நீங்கள் எழுதலாம் என எமது மூத்தவர்கள் சிலரைக் கேட்கிறேன். புலியைப்பற்றி எழுதப்போனால் தான் உங்களுக்குச்சிக்கல். இனச்சிக்கல்களின் தொடக்ககாலத்தைப்பற்றி நீங்கள் எழுதலாம் தானே.

Labels: , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: குழலி

மிக சுருக்கமாக எழுதிவிட்டீர்கள், வரலாற்றை பொறுத்தவரை இலங்கை எப்போதுமே ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததில்லை (சோழர்கள் காலம் தவிர) எப்போதுமே ஒரு தமிழ் அரசாங்கமும் ஒரு சிங்கள அரசாங்கமும் தீவில் இருக்கும், ஆங்கிலேயர்கள் இலங்கையை ஒன்றினைத்துவிட்டனர்.

22.46 14.6.2005
 
´´´´´ஹிஹிஹி.....

வந்தே மாதரம்!பாரதமாதவுக்கு ஜேய்!.........வந்தே மாதரம்..........ஹீ ஹீ......ஹீ........வந்தேமாதரம்!......
 
அடடா!
அநாமதேயமே!
மலேசியாவில இருந்து கொண்டு வந்தே மாதரம் பாடுறியளே?
 
எழுதிக்கொள்வது: elilan

நன்றி வன்னியன்
எமது தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு எங்கள் வரலாறு பற்றியும்,போராட்டத்தேவைப்ற்றியும் தெளிவுபடுத்த இது நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.திட்டமிட்ட இந்திய ஊடகங்களின் பிரச்சாரங்களால் கட்டுண்டு வாழும் எம்தமிழ் உறவுகளுக்கு தெளிவுபடுத்த இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்
அன்புடன் எழிலன்.

0.0 15.6.2005
 
தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.

விரிவாகவே எழுதுங்கள்.

ராஜ்குமார்
 
innum konjam virivaaka ezuthalaam. athu palarukku uthaviyaaka irukkum
 
அன்புநிறை வன்னியன்,

எனக்கும் நெடுங்காலமாக ஈழப்போராட்டத்தைப் பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். தமிழகத்தில் இதைப்பற்றிய விசயங்கள் நிறைய இருட்டடிப்பு செய்யப்பட்டன. என் நினைவு தெரிந்த வரையில் அரசல்புரசலாக கேள்விப்பட்டது தான். வலைப்பதிவுக்கு வந்த பிறகு உங்களைப் போன்ற சகோதரர்கள் எழுதுவதை படிக்கும் போது மனம் கண்ணிப்போகிறது. முழுசரித்திரத்தையும் அறிய ஆவல். விரிவாக உங்கள் தொடர் தொடருட்டும்.

அன்புடன் விஜய்.
 
எழுதிக்கொள்வது: Vetri Thirumalai

வன்னியன் அவர்களே

எழுதிக்கொள்வது:வெற்றி திருமலை



தமிழ் மக்களின் அறியாமையை போக்க இந்த பதிவுகள் உதவும். இத்தகவல்களில் சிலவற்றவை(மதிப்பெண்கள், ஜெயில்கைதிகளை வைத்து தமிழர்களின் நிலங்களை கைப்பற்றியது - இன்னும் நீங்கள் எழுதவில்லை) நான் ஏற்கணவே அறிந்திருந்துள்ளதாலேதான் என்னால் ஈழதமிழரின் துயரை புரிந்து கொள்ள முடிந்தது. எனவே இது கண்டிப்பாக நிறைய மக்களின் மனநிலையை மாற்ற உதவும்.



உங்கள் பதிவுகளுக்கு எனது நன்றிகள்.



அன்புடன்

வெற்றி திருமலை

(இப்பதிவுலும் ம்ற்றும் அடுத்த பதிவுலும் இருக்கும் பின்னூட்டங்களை பார்க்கும் போதுதான் தெரிகிறது தமிழர்களுக்குள் உள்ள ஒற்றுமையிண்மை.இதனால் தான் நாம் பல வருடங்கள் அடிமையாய் இருந்தும் திருந்த்வில்லை)


13.9 16.6.2005
 
Sorry for writing in English. I would suggest a novel by Se.Yoganathan – Iraval Thaainadu – as a starter. This was written way back in the eighties in Kanaiyazi. Though I happened to have a comparatively better understanding of the situation about the Tamil struggle through some close friends from Yazppanam, this novel was an eye-opener.

Love,
Kumar
Java
(sarabeswar@yahoo.com)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]