Friday, April 21, 2006

யாழ் - இடப்பெயர்வு

*********நட்சத்திரப் பதிவு -09*********
இம்மாதம் பத்தொன்பதாம் திகதியுடன் யாழ்குடாநாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 19.04.1995 அன்றுதான் சூரியக்கதிர் -02 என்ற இராணுவ நடவடிக்கையை எதிரி தொடக்கினான். ஏற்கனவே சூரியக்கதிர் -01 நடவடிக்கை மூலம் வலிகாமத்தின் சில பகுதிகளையும், யாழ் நகர்ப்பகுதியையும் கைப்பற்றி வைத்திருந்தான்.
கைப்பற்றப்ப படாத மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றவே இரண்டாவதும் மூன்றாவதும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

முதலாவது நடவடிக்கையில் மக்களற்ற சூனியப்பிரதேசத்தையே இராணுவம் கைப்பற்றியது. மற்ற நடவடிக்கையில் மக்களோடு சேர்த்து நிலங்களையும் கைப்பற்றிக்கொண்டது.

முதலாவது நடவடிக்கையில் யாழ் நகர்ப்பகுதி விடுபட்ட நேரத்தில் வெளிவந்த தமிழீழ எழுச்சிப்பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.

சின்ன சின்ன கூடு கட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்



இன்னொரு பாடல்.
பொன்.கணேசமூர்த்தி எழுயதென்று நினைக்கிறேன்.
"புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது"




இரண்டு பாடல்களுமே மேஜர் சிட்டு வினால் பாடப்பட்டவை.

**********************
22.04 ஆகிய இன்றும்கூட மிக முக்கியநாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு மைல்கல். நாம் பெருவெற்றியொன்றைப் பெற்ற நாள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Labels: , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: st

மாங்குளத்தாக்குதல் நடந்த நாளா??

20.19 22.4.2006
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அது மாங்குளத்தாக்குதல் நடந்த நாளில்லை.
ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட நாள்.
அதுசம்பந்தமான அடுத்த பதிவும் போட்டுவிட்டேன்.
 
எழுதிக்கொள்வது: st

ஆமாம். தவறுக்கு வருந்துகின்றேன். அக்கினிச் சுவாலை நடவடிக்கை நடவடிக்கையை சிங்கள ஆக்கிரமிப்பு சக்திகள் இந்த மாதத்தில் தான் செய்தாக அறிந்திருக்கின்றேன்.
அதை முறியடித்து புலிகள் கொடுத்த அடியை சந்திரிக்க அம்மையார் என்னும் மறந்திருக்க மாட்டார்.

கருத்து எழுதி வட்டு யோசித்தேன் அதைத் தான் நீங்கள் கருதுகின்றீர்கள் என்று. இருந்தாலும் ஆனையிறவு வெற்றிக்கு புலிகள் எவ்வித வெற்றி விழரவையும் இம் மாதம் ஏன் கொண்டாட வில்லையே!!

9.39 23.4.2006
 
st,
வருகைக்கு நன்றி.
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் 24.04 இல் வருகிறது.
நாளைக்குத்தான்.

ஆனையிறவு கொண்டாடப்படாததையிட்டு எனக்குத் தெரியவில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]