Wednesday, May 31, 2006

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

சிறிரங்கன் சிக்கல் குறித்த பதிவு.

இப்பதிவு இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு முதன்மைச் சம்பந்தமில்லாதது. எவ்விதத்திலும் அதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இது உதவாது. எனவே ஏதோ விசயமிருப்பதாக நம்பி ஏமாற வேண்டாம்.
ஓர் எதிர்ப்புப் பதிவை இடவேண்டுமென்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை. அப்பிரச்சினையைத் திசைதிருப்பும், கொச்சைப்படுத்தும் எண்ணமுமில்லை. இந்தத் தெளிவோடு மேற்கொண்டு படியுங்கள்.

"இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கண்டிக்கிறேன்".

இதுவரை நான் 'உண்மையாயிருக்கும் பட்சத்தில்" என்ற சொற்றொடரைப் பாவிக்கவில்லை. ஆனால் இப்போது பாவிக்கிறேன்.
இச்சொற்றொடர் பாவித்த சிலர் மீது பொடிச்சி போன்றவர்களிடமிருந்து விழுந்திருக்கிறது சாத்து. நான் பாவிக்கவில்லையென்றாலும் அதே நிலைதான் எனதும் என்பதாலும், எதிர்வினை இல்லாமலே விட்டால் தாங்கள் சொன்னதுதான் சரியென்று சிந்திக்கத் தலைப்படுவதோடு(ஏற்கனவே சிறிரங்கன், ஜனநாயகம், இராயகரன் போன்றவர்களுக்கு எதிர்வினை இல்லாததால் அவர்கள் சொல்வது சரியென்றும் புலி அடிவருடிகளின் ஆற்றாமையென்றும் பி.கே சிவகுமார் சொல்லித் திரிந்தது போல) தொடர்ச்சியாக இதுபோன்ற இலவச அறிவுரைகளை / கண்டனங்களை என்போன்றவர்கள் சந்திக்க வேண்டிவருமென்பதாலும்,
இச்சிறு பதிவு.

மீண்டும் சொல்கிறேன்.
சிறிரங்கனின் விசயம் "உண்மையாயிருக்கும் பட்சத்தில்" எனது கண்டனமும் அவருக்கு என் ஆதரவுமுண்டு.
மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பதிவு எழுத வந்த காரணத்தை மட்டும் பார்த்துச் செல்கிறேன்.

இந்த 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என் சொற்றொடர் சிலராற் பாவிக்கப்பட்டது சிறிரங்கனின் இரண்டாம் பதிவுக்கு முன்பு என்பதை ஒரு தகவலாகச் சொல்லிவிட்டு மேற்கொண்டு செல்கிறேன்.
யாரும் ஒருவர் சொல்வதை உண்மையென்று அப்படியே நம்பி துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுவும் இப்படியான விசயங்களின் போது தங்களின் சந்தேகத்தைத் தெரிவிக்க குறைந்தபட்சமாக இப்படியொரு சொற்றொடரைப் பாவிப்பதை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதாலேயே அவர்கள் உண்மையில் அனுதாபம் தெரிவிக்காதவர்கள் ஆகிவிடுவார்களா? இப்படிச் சொல்லாமல் நேரடியாக வந்து சொல்பவர்களின் எத்தனை பேர் உண்மையில் சிறிரங்கனில் அக்கறையுள்ளவர்? புலியைச் சாட அருமையானதொரு சந்தர்ப்பமென்று வருபவர்கள் எத்தனை பேர்?

நிற்க, என்போன்றவர்கள் சிறிரங்கன் போன்றோரை எழுந்த மானத்தில் நம்ப முடியாமலிருப்பதற்கும், இப்படியான தருணங்களில் 'இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில்' என்று அடைமொழி போடுவதற்கும் வலுவான காரணங்களுண்டு. அவர் வலையுலகில் வந்தகாலம் முதல் வாசித்துவருபவன் என்ற முறையில் என் பட்டறிவு அதுதான்.

"புலிகளால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் போருக்கு வளர்க்கப்படும் வேள்விக் கிடாய்கள்" என்று சிறிரங்கன் எழுதினார். அதை விமர்சித்த போது, 'உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும். உலகம் முழுவதும் எனக்குத் தொடர்பிருக்கிறது' என்றுதான் பதில் வந்தது.
நேரே சம்பந்தப்பட்ட, அறிந்த, பழகிய விசயங்கள் மட்டில் இப்படியொரு பொய்யைச் சொன்னதையும் அதையே கேள்வியின்றி நிறுவியதையும் பார்த்துக்கொண்டு பேசாமலே இருக்க முடிந்தது. முல்லைத்தீவில் ஒரு சிறுவர் இல்லம் சுனாமியில் அகப்பட்டு அனைவருமே கொல்லப்பட்டதை, 'புலிக்காக வளர்க்கப்பட்டவர்கள் அழிந்தார்க்ள' என்று ஒருவித மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்ட ஊடகத்தின் தொடர்ச்சியாக்குமென்று நினைத்து விட்டாயிற்று.


மேற்படிச் செய்தியை உண்மையென்று நம்புவதாக நான் நினைக்கும் பொடிச்சி போன்றவர்களால் எந்தக் கேள்வியுமின்றி சிறிரங்கனின் கூற்றை நம்பமுடிவது சரியென்றால், நேரடி அனுபவத்தில் பொய்யென்று வலுவாகத் தெரிந்திருக்கும் என்போன்றவர்கள் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற அடைமொழியைப் போடக்கூடத் தகுதியில்லாமற் போயிற்றோ?

"காயடிக்கப்பட்ட போராளிகள், போராளிகளுக்குக் காயடித்தல்" என்று நானறிய இருமுறை சொல்லியுள்ளார். ஆனால் உந்த 'காயடிப்பு' எண்டதுல ஏதாவது உட்கருத்து, படிமம் எண்டு ஏதாவது கோதாரி இருக்கோ அல்லது நேரடியான அர்த்தம் தானோ எண்டு விளங்காததால (எனக்குக் கொஞ்சம் விளக்கம் குறைவுதான்.) அதைப்பற்றிக் கதைக்காமலே போறன்.

சிறிரங்கன் மட்டுமன்றி எந்தப் புலிவிமர்சகனையும நான் இதே கண்ணோட்டத்திற் பார்க்க வெளிக்கிட்டு பல மாதங்களாகிவிட்டன.
புலியை எதிர்த்துக் கருத்துச் சொல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதை வரவேற்கிறேன். ஆனால் ஏன் புளுகு மூட்டைகளை அவிழ்க்க வேண்டும். இது புலியெதிர்ப்புக் கருத்தாளிகளின் வங்குரோத்துத் தனத்தையல்லவா காட்டுகிறது?

தேனி போன்ற வடிகட்டின புளுகுத் தளங்களை விட வலைப்பதிவில் எழுதுபவர்களை நான் வித்தியாசப் படுத்தியே வைத்திருக்கிறேன். (தேனிக்கு எதிர்முனையில் நிதர்சனத்தை வைக்கலாமென்றாலும் நிதர்சனம் தேனியை நெருங்க முடியாதென்றே நினைக்கிறேன்)

"பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் உல்லாசமாகப் படிக்கிறார், அவருக்கு மகேஸ்வரன் தான் விசா எடுத்துக் கொடுத்தது" என்று ஒரு புளுகுப்பதிவு வருகிறது. அதில் ஒருவர், "அது பிழை, அவர் வன்னியில்தான் இருக்கிறார், போராளியாகவே இருக்கிறார்" என்று பதில் போட,
"அவர் வெளிநாடு போனாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அப்படிப் போகலாமா இல்லையா என்பதே இப்பதிவின் விவாதம்"
என்று ஒரு குத்துக்கரணம் அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

சிறிரங்கனின் பதிவிலேயே, "வன்னியன் போன்றவர்களுக்கு மூளை சுகமில்லை, அவர்களைச் சரியானபடி எங்காவது காட்டி வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும் ,சிறிரங்கனுக்கும் இராகரனுக்கும் தான் மூளை இருக்கிறது, அவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்தவர்கள்" என்றும் ஒருவர் சொல்லிவிட்டு அதைப் பிறகும் வந்து நிறுவுவார்.

"பிரபாகரனின் மனுசி ஐரோப்பா சுற்றுகிறாள்" என்று இன்னொரு பதிவர்.
அண்மையில் கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது சம்பந்தமான பதிவொன்றில் ஒருவர்,
'சும்மா இருங்கோடாப்பா, அங்க பால்ராச்சை சுத்தி வளைச்சுப் போட்டாங்களாம். ஆள் தப்பிறது கஸ்டம்தான்' என்ற பாணியிற் சொல்லிவிட்டுப் போகிறார். தாங்கள் நடக்க வேண்டுமென்று நினைக்கும் சம்பவங்களை உண்மைபோல சிருஸ்டித்து அள்ளிவிட்டுக்கொண்டு போவார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் புளுகுகளை அவர்களே நம்பத் தலைப்பட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பல சந்தர்ப்பங்களில் தேனி மனோபாவத்திலிருந்து மாற்றமில்லாத பதிவுகள் வரும். தேனி மனோபாவம் என்பதற்குப் பல காட்டுக்களைக் காட்ட முடியுமென்றாலும், சுனாமி நேரத்தில் புலிகளில் 2000 பேர் கொல்லப்பட்டனர் என்று தாங்களே உருவாக்கிச் செய்தி போட்டதும் தொடர்ச்சியா அதைச் சொல்லிக்கொண்டிருந்ததும், பிரபாகரன் இறந்துவிட்டாரென்ற கதையை அரசதரப்பே பின்வாங்கிவிட்ட நிலையிலும்கூட அது உண்மையென்று தொடர்ந்து சொல்லிவந்ததும், பிரபாகரன் நோர்வேத் தூதுவரைச் சந்தித்த பின்னும், தமிழ்ப் புத்திசீவிகளைச் சந்தித்து சுனாமி மீட்புப்பணி பற்றிக் கதைத்த பின்னும், "அது பிரபாகரன் இல்லை. அவரைப்போல ஒருவரை வெளிக்கிடுத்தித்தான் புலிகள் நாடகமாடுகின்றனர்" என்று தொடர்ந்து சொல்லும் மனோபாவத்தைச் சொல்லலாம்.

இவர்களில் யாராவது சிறிரங்கன் சொன்னதைப் போல ஒரு விசயம் சொல்லியிருந்தால் கட்டாயம் என்னிடமிருந்து கண்டனமும் ஆதரவும் வந்திருக்கும். ஆனால் 'இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு அல்லது அதே உணர்வோடுதான் அது வரும்.

மேற்கண்டவர்களில் இருந்து சிறிரங்கனை ஓரளவு தனித்துப் பார்க்கலாம்.
என் பார்வையில் பலநேரங்களில் குழப்பகரமான பார்வையைத் தருவார். ஒருவர் தான் இந்தப் பேரில் எழுதுகிறாரா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பங்கள் தருவார். அதாவது வாசிக்கும் பதிவைப்பொறுத்து உடனடியாகவே அதீத உணர்ச்சிவசப்பட்டு (ஆதரவாகவோ எதிராகவோ) கருத்துச் சொல்வார்.
ஒரேயொரு காட்டு:

ஒருமுறை walkman க்கு என்ன தமிழ்ச்சொல் சரிவரும் என்று டோண்டு அவர்களோடு விவாதம் தொடங்கி சில சொற்களைப் பரிசீலித்துக் கதைத்தார். பின்வந்த ஒரு நாளில் நட்சத்திரக்கிழமையில் வசந்தன் பதிவில் தனித்தமிழ் பற்றியும் புலிகளின் தமிழ்ப்படுத்தலை முழுதாக ஆதரித்தும் (ஓரளவு பரப்புரைப் பார்வையிலும்) எழுதப்பட்ட பதிவொன்றில்
"வசந்தன்,இது நீர்தாம் எழுதியதோ?உம்மிடம் இவ்வளவு காட்மான விசயமெல்லாமிருக்கோ?சும்மா படங்காட்டிவிட்டுப்போய்விடுவீரென நினைத்தேன்,ஆனால் நீர் பண்டிதனானாய். 1995இல் இதுபற்றி(தமிழ்ப்படுத்தல்)ஈழமுரசில் எழுதியுள்ளேன்.புலிகளின் தமிழ்ப்படுத்தலில் எனக்கும் உடன்பாடுண்டு.ரயிலுக்குத் தொடரூந்து எனும் வார்த்தை எவ்வளவு பொருத்தமாகவுள்ளது!இவை காலப்போக்கில் ஏற்கப்படும்."
என்று பின்னூட்டம் போட்டிருந்தார்.
நாலோ ஐந்தோ மணித்தியாலம் தான் கழிந்திருக்கும். கறுப்பி, சொற்களைத் தமிழாக்குவதையும், புலிகளின் தமிழாக்கத்தையும் நக்கலடித்து ஒரு பதிவு போட்டிருந்தார். உடனேயே அதில் சிறிரங்கன் பின்னூட்டம் போட்டார். முழுதும் கறுப்பிக்கு ஆதரவாக. அதில் வானொலி, தொலைக்காட்சி போன்ற சொற்களே தேவையற்றவை, நேரடியாக றேடியோ, ரெலிவிஷன் என்றே பாவிக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு வசந்தன் பதவில் வந்து மதிகந்தசாமி 'றேடியோ' என்று எழுதியிருந்ததைக் குறித்துக்காட்டி, 'பார்த்தீர்களா? றேடியோ எண்டுதான் சாதாரணமாகப் பாவிக்கிறோம். எணடபடியா வானொலி எண்டு சொல்லிறது தேவையில்லை. றேடியோ எணடே பாவிப்போம்' என்றார்.

walkman க்குத் தமிழ்ச்சொல் உருவாக்க விவாதம் நடத்தியவர், புலிகளின் தமிழ்ச்சொல்லாக்கத்தை ஆதரித்துப் பின்னூட்டம் போட்டவர், அதுபற்றி முன்பு ஈழமுரசில் எழுதியதாகச் சொன்னவர், சில மணித்தியாலத்தில் முற்றிலும் எதிர்மாறான கருத்தை - அதுவும் பல்லாண்டுகளாக வழக்கத்துக்கு வந்துவிட்ட வானொலியையும் தொலைக்காட்சியையும் தேவையற்ற சொல்லாக்கமென்று கறுப்பியின் பதிவிற் சொல்கிறார். இரண்டு பதிவிலும் இடப்பட்டவை அவரது கருத்துக்கள் என்பதைவிட இரு பதிவுகளும் அவருக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிகள் என்றுதான் சொல்லலாம்.

இதைவிட, தமிழ்மண -நந்தவன மாற்றத்தின் போது சிறிரங்கன் அடைந்த குழப்பம்; தொட்டதுக்கெல்லாம் தன் வலைப்பதிவை முடக்குகிறார்கள், தூக்குகிறாரகள், தனக்கெதிராகச் சதி செய்கிறார்கள் என்று பதிவுகள் போட்டது; பொடியன்கள் பிரச்சினையில் எல்லோரும் கோமாளிகளாகவும் நகைச்சுவையாகவும் கருதிக்கொண்டிருக்க சிறிரங்கன் மட்டும் குய்யோ முறையோ என்று குதித்தது; பின் டக்ளஸ் - இதயவீணை - பொடியன்கள் என்று ஒரு தொடர்பைக் கொண்டுவந்தது என்று பலவற்றுக்குள்ளால் இப்புரிதலைச் சொல்லிச் செல்லலாம்.

இவை சிறிரங்கனை இழுக்காகவல்ல. மாறாக இப்படியாகவற்றுக்குள்ளால் தான் சிறிரங்கன் பற்றிய என்போன்றவர்களின் புரிதல் தொடர்கிறதென்பதைச் சுட்டவே.

இப்படியாக நான் புரிந்து வைத்திருக்கும் சிறிரங்கனிடமிருந்து, (மற்றவர்கள் அப்படித்தான் புரிந்தார்களா என்று தெரியாது) வெளிவரும் எந்தக் கருத்தையும் இரட்டிப்புக் கவனத்தோடே எதிர்கொள்வேன், அது எனக்கோ என் தரப்புக்கோ ஆதரவானதென்றாலுங்கூட.
****************************

இங்கு நானெழுதிய எதுவும் சிறிரங்கனை மட்டந்தட்டவோ, கேலி செய்யவோ இல்லை. என்போன்றவர்களின் புரிதல் எப்படியாக இருக்கிறதென்பதைச் சுட்டவே. அதுகூட 'உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற ஒற்றைவரி பாவித்தவர்கள் மேல் சடுதியாக வைக்கப்பட்ட விமர்சனத்தாலேயே.

இதில் சிறிரங்கன் பொய் சொல்கிறார் என்றுகூடச் சொல்லத் தேவையில்லை. இத்தகவலில் இருக்கக் கூடிய தவறுகள், இயல்பாகவே சிறிரங்கனுக்கிருக்கும் சடுதியாக உணர்ச்சிவசப்படும், குழப்பமடையும் தன்மையால் வந்திருக்கக் கூடிய பயம் என்பவற்றையெல்லாம் ஒரு சகவலைப்பதிவர் யோசிக்கலாம். அதைவிட இயல்பாக இருக்கக்கூடிய சந்தேகங்களும் சேரும்.

இந்த நிலையில், சிறிரங்கனின் இரண்டாவது பதிவு வருவதற்கு முன்னர் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு ஒரு பதிவர் தன் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதில் என்ன பெரிய தவறைக் கண்டீர்கள்? 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒப்பாரி வேறு. இப்படிக் கேட்டதுக்கூடாக சிறிரங்கனின் கூற்றுமீது நான் சந்தேகம் கொள்ளத்தக்க காரணங்களாகக் கருதியவை மட்டில், நீங்கள் சிறிரங்கனின் கூற்றுக்களை உண்மையென்று முழுமனதாக நம்புவதாக எடுத்துக்கொண்டு, உங்களிடம் அவைபற்றிக் கேட்டு, இறுதியில் 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒரு கேள்வியோடு முடிக்கலாம். சிறிரங்கன் மட்டுமன்றி அதே வகைகுள் நான் அடக்குபவர்களின் கருத்தையும் தூக்கிக்கொண்டு கேட்கலாமோ? அப்படியென்றால்,

"அண்மைக்காலத்தில் இராணுத்தாற் கொல்லப்படுபவர்கள், புலிகளாகவோ புலிகளின் செயற்பாட்டாளராகவோ அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தெரிந்தெடுக்கப்படடே கொல்லப்படுகிறார்கள்"
என்ற கருத்து முதற்கொண்டு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.
இப்படியே மாறிமாறி ஒராளை ஒராள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
****************************
இதில் சம்பந்தப்பட்டவர்கள் வலைப்பதிவுலகுக்குப் பழையவர்கள் என்றபடியால் சுட்டியெல்லாம் போட வேண்டியதாக நான் நினைக்கவில்லை.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

நியாயமான கேள்விகளுண்டு.இதுதாம் நான் வன்னியன்!இதைவிட எதுவுரைப்பேன் நண்ப?

9.26 31.5.2006
 
நீர் எழுதியுள்ளதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிறீரங்கன் மீது இலேசாக சந்தேகம் கொள்ளத் தலைப்படுகிறேன்.
 
உம்மாண்டிகள் எண்ட பேரில நாங்கள் சும்மா பள்ளீக்குட லீவுக்குப் பம்பலா பொடியங்கள் எண்ட பதிவை நடத்த அதை சிறீரங்கத்தார் உது ஈபிடிபியின்ர, இதய வீணையின்ர டக்ளசின்ரை எண்டு பெரிய பெரிய கதையெல்லாம் எடுத்து விட எங்களுக்கு அஞ்சும் அறிவும் கெட.. வேண்டாம் உந்த பெரிய இடத்து விடயங்கள்.. நாங்களுண்டு எங்கடை பள்ளிக்குடம் உண்டு எங்களோடை படிக்கிற பெட்டையள் உண்டு எண்டு போட்டு எங்கடை அம்மா அப்பா கொம்புயூட்டர் வயருகளை பிடுங்கி எறிய முதல் நாங்களே அதை நிப்பாட்டிப்போட்டுஅதின்ர பெயர் குறிச்சொல் எல்லாத்தையும் அந்த இடத்திலேயே மறந்திட்டம்..

உம்மாண்டி.. (முன்னாள் பொடியன்களின் தலை)
 
Vanniyan, Thankx for this post. Will write something abt this if my time permits.
 
வணக்கம் வன்னியன்.

சிறீரங்கனை பற்றி புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்.இந்த கூத்துகளை
நான் அவதானித்துக்கொண்டே வருகின்றேன்.ஆனாலும் இது நாள் வரை பதிலிட்டது கிடையாது.இன்று பதிலிட வேண்டும் போல தோன்றுகின்றது.

மற்றைய புலி எதிர்ப்பாளர்கள் போலல்லாமல் சிறீரங்கன் பாணி தனிப்பாணி.வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல. ஒரு நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிப்பதைப்
போல இது கூட அவரின் தந்திரம் தான்.

எப்படி இது தந்திரம் அல்லது அவருக்கு
வெற்றி என்றால், அவரின் பதிவை பார்த்வுடனேயே எல்லோரும் கண்டிக்கிறோம் எண்டு சொன்னீர்களே அந்த இடத்தில் தான் அவரின் வெற்றி
இருக்கிறது.அவரின் எழுத்தின் வெற்றி
அவர் என்ன நோக்கத்தில் எழுதிவருகிறாரோ அதன் வெற்றி.

அவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வரும் எவருக்குமே புரியும்
அவரின் ப்ல மிகைப்படுத்தல்கள் பற்றி.
அதன் ஒரு அங்கம் தான் இது.எழுந்த
மானத்தில் இதை நம்ம நான் தயாரில்லை.

பொடிச்சி போன்றவர்கள் ஆடுவதற்கு மேடை? கிடைக்காதா என்று காத்திருப்பவர்கள்.சரியான மேடை கிடைத்ததும் வெளுத்துவாங்குவார்கள்.
 
Ahaaaaaa.. Its a Exclusive Report...
 
வண்னியன் ....
சிறிரங்கனின் அனைத்து பதிவுகள் , பின்னூட்டங்களை அலசி ஆராயவிட்டாலும் என்னால் வாசிக்கப்பட்ட வற்றில் இருந்து தங்களை பொன்ற ஒரு முடிவையே சிறிரங்கன் விடயத்தில் எடுத்திருந்தேன்.
ஆதலால் சிறிரங்கனின் பதிவை பார்த்த போதும் அதை பற்றி எதுவும் சொல்ல தோன்றவில்லை...

சிறிரங்கனில் சேறு பூச வேண்டும் என்பதல்ல
அவரதுஎழுத்துக்கள் எப்போதும் எனது பார்வையில் நிதானமாக இருந்ததில்லை....
 
வன்னியன்,
நன்றி. இந்த சிறீரங்கன் என்பவரைப் பற்றி PLOTE ஸ்தாபகர்களில் ஒருவர், ஈழத்தில் என் ஊரவர்[ அவர் இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி பாரிசில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார், நாகரீகம் கருதியும் , அவரின் பாதுகாப்பு கருதியும் அவரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை] சொன்ன சில கருத்துக்களை நேரம் கிடைக்கும் போது விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுகிறேன் . அத்துடன் நான் கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது தாரக்கி அண்ணர் [சிவராம்] இந்த நபரைப் பற்றி சொன்ன சில கருத்துக்களையும் சொல்கிறேன். எனக்கு சிரிப்பூட்டம் விடயம் என்னவென்றால், இங்கே சில "அறிவு மேதைகள்", "சனநாயகக் காவலர்கள்", சிறிரங்கன் என்பவர் எதோ அரிச்சந்திரன் போலவும் அவர் சொல்வது முழுக்க உண்மையென்றும் அவருக்காக தனிப்பதிவு போடுவதுதான். இவர்கள் உண்மையிலேயே ஏதும் அறியாத அப்பாவிகளா, அல்லது ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக வந்து சொல்லும் முட்டாள்களா, அல்லது புலிகளை , தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்று தான் புரியவில்லை.
 
வன்னியன், 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்பது குறித்து நான் எழுத நினைத்த விடயங்களை நீங்கள் எழுதியுள்ளீர்கள் நன்றி.
முதலில் சிறிரங்கன் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து எதிர்ப்பைத் தெரிவிப்பதிலும், சிறிரங்கன் தொடர்ந்து பழையநிலையுடன் எழுதவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொண்டு சில விடயங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
....
சிறிரஙகனின் பதிவில் பின்னூட்டம் எழுதியபின் வேறு எங்கும் -சிறிரங்கனின் பதிவிலோ- அல்லது பெயரிலி, ரோசாவசந்த போன்றவர்களின் பதிவுகளிலோ எனக்கிருந்த தனிப்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாய் இடாததற்குக் காரணம், அச்சுறுத்தலுக்கு எதிரான எதிர்ப்பு முன்னிலைப்படுத்தவேண்டுமே தவிர எங்களின் விமர்சன வியாக்கியானங்களைப் பிறகு செய்துகொள்ளலாம் என்ற ஒரு காரணமே மட்டுமே. இப்போது சிறிரஙகன் பதிவு எழுதவும், பின்னூட்டம் எழுதவும் செய்கின்ற ஒரளவு சுமுகமான சூழலில் என கருத்தை முன்வைக்கலாம் என்று நம்புகின்றேன்.

நானும் ஈழநாதன் கூறிய 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்பதை மேற்கோள் காட்டியே சிறிரங்கனின் பதிவில் எழுதினேன்.. அதற்கு எனக்கு தனிப்பட்டளவில் சிறிரங்கனின் முந்தைய எழுத்துக்களில் தென்பட்ட குழப்பகரமான (நீங்கள் குறிப்பிடும் சில காரணங்கள் உட்பட) நிலையும், சில நம்பகத்தன்மையற்ற தன்மையும் மட்டுமே காரணமாகும்.
......
ஏதோ புலி வால்களால் மட்டும் தான் இவ்வாறான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தேசத்தில் நடக்கிறது என்பது மாதிரியும்...எங்கே போய் முடியுமோ என்று கவலைப்படுபவர்கள்... சில வருடங்கள் பின்னோக்கிச் சென்று பார்க்கலாம்... (விருப்பம் என்றால் அதற்கு அப்பாலும் போகலாம்). புஷ்பராஜா தரவழிகள் சுகன் போன்றவர்களை மண்டையில் போட துவக்கோடு திரிந்தாகவும் சுகன் போன்றவர்கள் தலைமறைவாக எல்லாம் இருந்திருக்கின்றார்கள் என்று கட்டுரைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன (அதுவும் குழப்பகரமான செய்திகளாக -எனக்கு- இருப்பதால் 'உண்மையாக இருக்கும்பட்சத்தில்' என்பதைச் சேர்த்துக்கொள்கின்றேன்). அதுமட்டுமில்லாமல் அசோக் (உயிர்நிழலில் அசோக், துடைப்பான் என்ற பெயரில் எழுதியவர்)) அவரோடு பிணக்குப்பட்ட இன்னொரு மாற்றுக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் குழுவால் கடுமையாகத் தாக்கப்பட்டும் இருக்கிறார் (இங்கேயும் மீண்டும் 'உண்மையாக இருக்கும்பட்சத்தில்' சேர்த்துக்கொள்கின்றேன்). இன்று வலைப்பதிவுகள் எழுதுகின்ற அனேகருக்கு இந்தச் சம்பவம் இணையதளங்களிலும், தனிப்பட்ட மின்னஞ்சலிகளிலும் தெரியப்படுத்தப்பட்டபோது இவ்வாறான தார்மீக எதிர்ப்பை காட்டியிருப்பார்கள் என்றே நம்புகின்றேன். அசோக்கின் சம்பவம் குறித்து கையெழுத்து வைக்குமாறு அன்று அனுப்பட்ட பெட்டிசனில் கையெழுத்திட்டு குறைந்தபட்ச எதிர்ப்பை எத்தனைப்பேர் காட்டினார்கள் என்பதையும் அறிய ஆவல். ஏன் ரயாகரன்கூட, மறைந்த கலைச்செல்வன் பற்றி எழுதிய பதிவில், கலைச்செல்வன் தன்னைச் சட்டையில் கைபிடித்து வன்முறையைப் பிரயோகித்து இலக்கியச்சந்திப்பிலோ ஏதோ கூட்டத்திலோ இருந்து வெளியேற்றியவர் என்று எழுதி வாசித்ததாயும் நினைவு. அப்போதும் 'இது எங்கே போய்முடியும்?' யாராவது கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வன்முறைப்படுத்தப்பட்ட எங்கள் சமூகத்தில் எல்லா நிலையிலும் எல்லாத் தரப்பாலும் வன்முறை பிரயோகிப்படுகின்றது (ஏன் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறை கூட அதன் ஒரு நீட்சிதான்) என்பதைக் குறிக்க விரும்புகின்றேனே தவிர சிறிரங்கனின் அச்சுறுத்தலுக்கு நிகராய் இவற்றை நிறுத்தி சமாதானப்படுத்திக் கொள்வது என் நோக்கமில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்கின்றேன்.

இறுதியாக, மீண்டும் சிறிரங்கனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எனது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எழுதுகின்றவன் என்றவகையில் சிறிரங்கன் மீண்டும் இயல்பாய் எழுதத்தொடங்கலே எமக்கான மிகப்பெரும் சனநாயகமாயும்... நிம்மதி கொள்ளத்தக்கதாகவும் இருக்கும். நன்றி.
 
முதலில் சிறிரங்கன் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து எதிர்ப்பைத் தெரிவிப்பதிலும், சிறிரங்கன் தொடர்ந்து பழையநிலையுடன் எழுதவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை என்பதையும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டு சில விடயங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
.....
நானும் ஈழநாதன் கூறிய 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்பதை மேற்கோள் காட்டியே சிறிரங்கனின் பதிவில் எழுதினேன்.. அதற்கு எனக்கு தனிப்பட்டளவில் சிறிரங்கனின் முந்தைய எழுத்துக்களில் தென்பட்ட குழப்பகரமான நிலையும் (நீங்கள் குறிப்பிடும் சில காரணங்கள் உட்பட), சில நம்பகத்தன்மையற்ற தன்மையும் மட்டுமே காரணமாகும். நீங்கள் மிகத்தெளிவாக அந்தச் சொற்றொடரைப் பாவிக்கவேண்டி இருப்பதற்கான காரணத்தை விளக்கியிருக்கின்றீர்கள். நன்றி.
.....
சிறிரஙகனின் பதிவில் பின்னூட்டம் எழுதியபின் வேறு எங்கும் -சிறிரங்கனின் பதிவிலோ- அல்லது பெயரிலி, ரோசாவசந்த போன்றவர்களின் பதிவுகளிலோ பின்னூட்டம் எதுவும் இடாததற்குக் காரணம் (எனக்கு அவர்கள் எழுதிய சிலவிடயங்களில் முரண்பாடு இருந்தும்), அச்சுறுத்தலுக்கு எதிரான எதிர்ப்பு முன்னிலைப்படுத்தவேண்டுமே தவிர எங்களின் விமர்சன வியாக்கியானங்களைப் பிறகு செய்துகொள்ளலாம் என்ற ஒரு காரணம் மட்டுமே. இப்போது சிறிரஙகன் பதிவு எழுதவும், பின்னூட்டங்கள் எழுதவும் செய்கின்ற ஒரளவு சுமுகமான சூழலில் என் கருத்தை இங்கே முன்வைக்கலாம் என்று நம்புகின்றேன்.
......
ஏதோ புலி வால்களால் மட்டும்தான் இவ்வாறான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தேசத்தில் நடக்கிறது என்பது மாதிரி கதைத்துக்கொண்டிருப்பவர்களுக்காய் மட்டும்... நாங்கள் சில வருடங்கள் பின்னோக்கிச் சென்று பார்க்கலாம்... (விருப்பம் என்றால் அதற்கு அப்பாலும் போகலாம்). புஷ்பராஜா தரவழிகள் சுகன் போன்றவர்களை மண்டையில் போட துவக்கோடு திரிந்தாகவும் சுகன் போன்றவர்கள் தலைமறைவாக எல்லாம் இருந்திருக்கின்றார்கள் என்று கட்டுரைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அசோக் (உயிர்நிழலில் அசோக், துடைப்பான் என்ற பெயரில் எழுதியவர்)) அவரோடு பிணக்குப்பட்ட இன்னொரு மாற்றுக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் குழுவால் கடுமையாகத் தாக்கப்பட்டும் இருக்கிறார் இன்று வலைப்பதிவுகள் எழுதுகின்ற அனேகருக்கு இந்தச் சம்பவம் இணையதளங்களிலும், தனிப்பட்ட மின்ன்ஞ்சலிகளிலும் தெரியப்படுத்தப்பட்டபோது இவ்வாறான தார்மீக எதிரிப்பை காட்டியிருப்பார்கள் என்றே நம்புகின்றேன். அசோக்கின் சம்பவம் குறித்து கையெழுத்து வைக்குமாறு அன்று அனுப்பட்ட பெட்டிசனில் கையெழுத்திட்டதாய் எனக்கு நினைவுண்டு. ஏன் ரயாகரன்கூட, மறைந்த கலைச்செல்வன் பற்றி எழுதிய பதிவில், கலைச்செல்வன் தன்னைச் சட்டையில் கைபிடித்து வன்முறையைப் பிரயோகித்து இலக்கியச்சந்திப்பில் இருந்து வெளியேற்றியவர் என்று எழுதி வாசித்ததாயும் நினைவு. (இவை அனைத்தும் கேள்விப்பட்ட சம்பவங்கள் மட்டுமே, தவறாய் சம்பவங்களைக் கூறியிருக்கின்றேன் என்று எவரும் கருத்துக்களைக் கூறினால் மன்னிப்புக்கேட்டு மாற்றிக்கொள்கின்றேன்)

ஆக,வன்முறைப்படுத்தப்பட்ட எங்கள் சமூகத்தில் எல்லா நிலையிலும் எல்லாத் தரப்பாலும் வன்முறை பிரயோகிப்படுகின்றது (ஏன் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறை கூட அதன் ஒரு நீட்சிதான்) என்பதைக் குறிக்க விரும்புகின்றேனே தவிர சிறிரங்கனின் அச்சுறுத்தலுக்கு நிகராய் இவற்றை நிறுத்தி சமாதானப்படுத்திக் கொள்வது என் நோக்கமில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்கின்றேன்.அனைத்துவிதமான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் இங்கே எழுதிக்கொண்டிருக்கும் அனேகருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்றே நம்புகின்றேன்.

இறுதியாக...எழுதுகின்றவன் என்றவகையில் சிறிரங்கன் மீண்டும் இயல்பாய் எழுதத்தொடங்கலே எமக்கான மிகப்பெரும் சனநாயகமாயும்... நிம்மதி கொள்ளத்தக்கதாகவும் இருக்கும்.
....
 
வன்னியன் ,

நல்ல தேவயான பதிவு.
சிரிரங்க்கன் என்பவர் வேறு ஒரு பேரிலும் தன்னை லண்டனில் வசிக்கும் ஒரு மருத்துவர் போல் எழுதி பலரை ஏமாற்றிக் கொண்டிருந்தவர், இப்போது இவ்வாறான ஒரு ஏமாற்று வேலையைச் செய்து ,தனது தளத்தை ,தன்னைப் பிரபலப்படுத்த முயற்ச்சி செய்துள்ளார்.இவர்களின் இந்த நாடகங்கள் விரைவில் அம்பலப் பட்டுப் போகும்.இவர் இது தான் எனது கடைசிப் பதிவு என்று சொல்லி இப்போது மூன்று பதிவுகள் போட்டு விட்டார்.மனைவி,மகன் பதிவு எழுத விடுகிறார்கள் இலை என்று சொன்னார், இப்போது அவர்கள் விட்டு விட்டர்களா?
இவரை நம்பி எமாறுபவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
இவர் போன்றவர்கள் மக்கள் ,ஜன நாயகம்,மக்கள் போராட்டம் என்று வார்த்தைக்கு வார்த்தை உமிழ்கிறர்களே தவிர,இவர்கள் சொல்வதொன்று செய்வதொன்று இது தான் இவர்களின் வரலாறு.மக்கள் இவர்களை நிராகரித்ததின் அடிப்படை அது தான்.புலிகளின் பலம் அவர்கள் நேர்மை ஆனவர்கள் என்பதுவே.இவர்களாப் போல் தங்கள் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டு ,பிழைப்புக்காக மக்கள்,ஜன நாய்கம், போராட்டம் என்று பொய் எழுதுபவர்களை எமது மக்கள் நன்கு இனங்கண்டு உள்ளனர்.இணயத்தில் உலவும் சில நண்பர்களுக்கு மட்டும் இது ஒரு புது விடயமாக இருக்கலாம்.இவர்களிற்கும் விளங்கும் வண்ணம் உங்களைப் போன்றவர்கள் இவ்வாறான பதிவுகள் இடுவது வரவேற்கத் தக்கது.

மேலும் சிரிரங்க்கன் உந்தப் பதிவைப் போட்ட போது அவரிடம் இது பற்றி பல கேள்விகளைக் கேட்டிருந்தேன் பின்னூட்டமாக, ஆனால் அவை எதுவுமே அவரால் அங்கே இடப் படவில்லை.ஊண்மை பேசினால் ஏன் இந்த விளயாட்டுக்கள்?
 
நாரதர்
நீர் மட்டுமல்லஇ நானும் இட்டிருந்தேன். அவை ஒன்றையும் அவர் இடவில்லை! அதற்கான பதில் அவரிடம் இல்லை போல!

இருந்தாலும் புலிகளுக்கு ஆதரவானவர்களை புலிவால் என்று பட்டம் போட்டதற்கு பதிலாக நான் பதில் பட்டத்தை வழங்கலாம் என நினைக்கின்றேன்!

எப்படி எச்சில் எலும்புக்காக இனத்தை காட்டிக் கொடுக்க இவர் றயகரன் போன்றவர்கள் செய்வதால் இந்தக் கும்பல்களுக்கு எலும்பு நக்கி என்ற அடைமொழியைக் கொடுத்து செய்யும் இழிச் செயலை வரைவிலக்கணப்படுத்துவோம்!
 
வன்னியன் இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன்.வலைப்பதிவில் தொடர்ச்சி விட்டுப் போய்விட்டது.அனேகமாக சிறீரங்கனின் பதிவில் நான் பின்னூட்டமிட்ட அடுத்த நாள் இது எழுதப் பட்டிருக்கவேண்டும் உங்கள் கருத்துத் தான் எனது கருத்துமாக இருப்பதால் மேற்கொண்டு சொல்வதை விடுக்கிறேன்.பொதுவாகச் சொன்னால் எவரது இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு தனிநபரையும் இயக்கத்தையும் விமர்சனத்துக்குள்ளாக்கவேண்டும் என்பது எனது கருத்து இங்கே விமர்சனமென்பது எல்லாக் கொலைகளைகளையும் கண்டிக்கிறேன் என்று மொட்டையாகச் சொல்லிவிட்டு தமக்குச் சார்பானதை மட்டும் பேசிக்கொண்டிருப்பதல்ல.

ஒருவர் கத்தியைத் தூக்கித்தான் வன்முறை செய்யவேண்டுமென்பதில்லை பேனாவைத் தூக்கியே(விசைப்பலகையைத் தட்டி என்று வாசிக்க)இன்னொருவர் மீது வன்முறை உஞற்றலாம் அதற்கு சிறீரங்கனை சரியான உதாரணமாகப் பார்க்கிறேன் அவரைப் போன்றவர்களால் தான் எனக்கு மாற்றுக் கருத்தாளர்கள் மீதிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப் போகின்றது இராணுவத்துக்கே முக்காடு போடாத நாங்கள் இந்த மாற்றுக் கருத்தாளர்களுக்காக ஊரில் முக்காடு போட்டுக்கொண்டு திரியவேண்டிய அவலம் வேறு கதை.

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்து வரும் கதையாடல்களுக்கு நான் மதிக்கும் ஒரு சிலர் பலியானதுதான் மனவேதனை.ஒருவர் எழுதும் எழுத்தை வைத்து அவர் உண்மையானவரா மனிதாபிமானியா என்று கண்டுகொள்ள முடியுமென்றால் அந்தக் கோதாரியை எங்கே போய்ச் சொல்ல

இந்த இடத்தில் இன்னுமொரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யலாம்.சிறீரங்கன் தன்மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளை மறுத்திருக்கிறார் ஒன்றைத் தவிர அவர் புளொட் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினர் என்ற குற்றச்சாட்டைத் தவிர.அது உண்மையா என்றறிய விரும்புகிறேன்.அதை அறிந்துகொள்வது பெரிய வேலையில்லை அவர் வாயாலேயே கேட்க விரும்புகிறேன்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]