Saturday, July 15, 2006

சீலன் பற்றி பிரபாகரன் - வீடியோப்பதிவு

கடந்த பதிவில் இணைப்புக்கள் சரியாக இல்லாததால் இது திருத்திய மீள் பதிவு.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின் 23 ஆவது நினைவு நாள். அவர் பற்றிய குறிப்புக்கள், ஆக்கங்கள் பரவலாக வெளிவந்துள்ளன.

தலைவர் பிரபாகரன் நேரடியாக அவரைப் பற்றிச் சொல்லியவற்றிலிருந்து மூன்று சிறுதுண்டுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவை விடுதலைத் தீப்பொறித் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை.
இப்பதிவில் வீடியோ வேலை செய்யவில்லையெனில் கூகிள் தளத்துக்கே சென்று பார்வையிடக்கூடியவாறு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.

திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?
எவ்வாறு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்?
என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.



வீடியோ இணைப்பு

பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.
தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார்.
சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.



வீடியோ இணைப்பு


சீலனின் இறுதி நாள் பற்றி.
சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி பிரபாகரன் விவரிக்கிறார்.





கூகிள் இணைப்பு

Labels: , , , ,


Comments:
வீடியோவை இணைத்தமைக்கு நன்றி.
Google இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை. மற்றவை நன்றாக இருக்கின்றன.
 
அன்பின் வன்னி,
நல்ல பதிவு. மிக்க நன்றி. மிகவும் தேவையான பயனுள்ள பதிவு. இது தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவுமீட்டல் மட்டுமல்ல, இது ஈழத்தமிழர்களின் வரலாறு. இப்படியான ஒலி, ஒளிப் பேழைகளைப் பேணிப்பாதுகாத்து எம் எதிர்காலச் சந்ததியும் எமது வரலாற்றை அறிந்து கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
 
வன்னி,
முன்னைய என் பதிவில் சொல்ல மறந்துவிட்டேன். மேலே அநோமதேய அன்பர் சொன்னது போல் கூகிள் இணைப்பு வேலை செய்யவில்லை.
 
வன்னியன்
வீடியோ இணைப்புக்கு நன்றி.
 
வன்னியன்!

சீலன், திருமலை புனித சூசையப்பர் பல்லூரியில் படித்தபோது நானறிவேன். அவரைப்பறித் தலைவர் குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. விடுதலைப்போராட்ட களத்துக்கு வருமுன்னமே சீலன் ரொம்பத்துடியாட்டமும், இரக்கசுபாவமும், தன்னிரக்கநிலையை விரும்பாதவனுமாகவே இருந்தவன்.
 
பெயரில்லாதவர் மற்றும் வெற்றி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கூகிள் வீடியோ வலைப்பக்கம் தான் பிசகிக்கொண்டிருக்கிறது.
 
சந்திரவதனா, மலைநாடான்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
எழுதிக்கொள்வது: thuyawan

கூகிளின் வீடியோப் பக்கம் குக்கீஸ் காரணமாக வேலை செய்ய மறுக்கும். அப்படி வர மறுக்கும் சந்தர்ப்பத்தில் ரெம்பிரரறி பைலை அழித்து விட்டு பாருங்கள். ஆனாலும் மீண்டும் ஒன்றைத் தான் பாரக்க அனுமதிக்கலாம்.

இதை விடஇ மோசிலா உலாவியைப் பாவித்தீர்கள் என்றால் அதில் குக்கீஸ் பிரச்சனை வரவாய்ப்பில்லை. மோசிலாவில் குக்கீஸ் பதியப்படுவதில்லை என்பதால்!

இதற்கு மேலும் பிரச்சனை என்றால் எனக்கு தீர்வு தெரியாதுங்கோ!!

11.26 17.7.2006
 
வன்னியன்,
மிகவும் பாராட்டப்பட வேண்டிய சிறந்த சேவை தங்களது.
பணி தொடர வாழ்த்துக்கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]