Friday, August 11, 2006

புலிகள் - ஒப்பந்தம் - சிறிலங்கா அரசு

யுத்தநிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஏட்டளவில் உள்ளது. யதார்த்தத்தில் நிறைவுக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது.

நேற்று (10.08.2006) புலிகளின் நிலைகள் சிலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். புலிகள் மூதூர் மீது நடவடிக்கை செய்தபோது 'எல்லோரும் பழைய இடங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும்' என்று விழுந்தடித்து அறிக்கைவிட்ட நோர்வே என்ன செய்யப்போகிறதென்று தெரியவில்லை. உண்மையில் நேற்றுத்தான் படையினர் கைப்பற்றினாலும் தாம் ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாக படைத்தரப்புச் சொல்லிவிட்டது. படைத்தரப்பு தாம் மாவிலாறைக் கைப்பற்றிவிட்டதாகச் சொன்ன நாளே நோர்வே இதைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எதுவுமில்லை. சிலவேளை படையினரின் கூற்றை நம்பாமல் இருந்தார்களோ என்னவோ? ஆனால் நேற்றிலிருந்து நாட்கள் எண்ணப்படுகின்றன.

மிகக்கொடூரமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணை, வான் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்குமதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ளது அரசபடை. விடுதலைப்புலிகள் தரப்பிலும் சேதங்கள். ஆனால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு என்ன செய்கிறதென்று தெரியவில்லை. மக்கள் இழப்புப் பற்றிக் கேட்டால், தாம் அந்தப்பகுதிகளுக்குப் போகமுடியாது, தமக்குப் பாதுகாப்பில்லை என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு இருந்துவிடுகிறார்கள். இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு விழுந்தடித்து ஓடுகிறார்கள்? குறைந்தபட்சம் அரசபடையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றாவது உண்மையைச் சொல்லத் துப்பில்லாத போக்கிரிக் குழுவாக இருக்கிறது இக்குழு. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களை மட்டுமன்றி மற்றவர்களையும் துரத்திவிட்டு எம்வழியை நாமே பார்க்கலாம் போல உள்ளது.

அணைதிறக்கச் சென்ற கண்காணிப்புக்குழுத் தலைவர் உட்பட்ட குழுமீது அரசபடை எறிகணைத்தாக்குதல் நடத்தியது. அணை திறக்கவிடாமல் செய்ததற்கு அரசுதான் காரணம். ஆனால் அதைப்பற்றிச் சொல்லும்போது 'சிலருக்கு தண்ணீர் தேவையில்லை, யுத்தம் தான் தேவை போலுள்ளது' என்றுதான் அவரால் சொல்லமுடிந்தது. கடுமையான வார்த்தைகளில் நேரடியாகக் குற்றம்சாட்ட அவருக்கு மனசில்லை. தங்கமான மனசு.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்றாட உணவைக்கூட மறுத்துவருகிறது அரசபடை. இவ்வளவு கொடூரமான தாக்குதல்களுக்கிடையில் காயப்பட்டவர்களைக் கூட சரியான முறையில் அப்புறப்படுத்த முடியாத நிலை. மக்கள் போக்குவரத்து நடக்கும் வெருகலில் படகின் மீதும் குண்டுபோட்டு மக்களைச் சாகடித்துள்ளது வான்படை. மக்களுக்குச் செல்லும் அனைத்து உதவிகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவசர நோயாளர் காவுவண்டிகூட மாங்கேணி படைநிலையில் தடுத்து திருப்பி அனுப்பப்ட்டுள்ளது.
ஆனால் கண்காணிப்புக்குழுவோ, "அம்மக்களுக்கு நிறையச் சிக்கல் இருக்குமென்று நம்புகிறோம். அங்குப் போனால் தான் இதுபற்றிக் கூற முடியும்' என்று பதில் தருகிறது.
ஒன்றில் இருந்து ஒழுங்காக வேலை செய்யவேண்டும். அல்லது மூட்டை முடிச்சோடு ஓடிவிடவேண்டும்.


இன்னும் நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு
ஒப்பந்தத்தைக்காட்டி தமிழர்தரப்பை மட்டும் கட்டிப் போட்டுக்கொண்டு மறுதரப்பை சுதந்திரமாக படுகொலை செய்யவிட்டுக்கொண்டிருப்பது தான் கண்காணிப்புக்குழுவா?
இதுதான் மத்தியஸ்தமா?

புலிகளின் ஆட்லறி நிலைகளைத்தான் தாக்குகிறோம் என்று பச்சைப்பொய்யை அரசதரப்புச் சொல்லும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள்? திருமலை மாவட்டத்தின் மாவிலாற்றுக்குச் சம்பந்தமேயில்லாத மட்டக்களப்பு மாவட்ட வாகரைப்பகுதி தாக்கப்படுகிறது.

இந்தக் குழுக்களை நம்பி சிங்களவனோடு ஒரு தீர்வுக்கு இணங்குவது எவ்வளவு முட்டாள்தனமாயிருக்கும்? இனிமேல் தனினாநாடு தவிர எந்தத் தீர்வுமே நடைமுறைச்சாத்தியற்ற நிலைக்குப் போயக்கொண்டிருக்கிறது. வேறு தீர்வுகள் பற்றிக் க்தைத்தாலும் ஆயுதக்கையளிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (அது இணைந்த நாடென்ற தீர்வானாலும்.)

இன்று மட்டக்களப்பிலும் தரவைப்பகுதியில் கடுமையான குண்டுவீச்சை அரசவான்படை செய்துள்ளது. புலிகளின் முகாம்தான் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யார் தாக்கப்பட்டால் என்ன? என்ன துணிவில் இன்னும் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதென்று சொல்லிக்கொண்டு இப்படி தாக்குதலைச் செய்கிறது அரசபடை? இதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் கண்காணிப்பாளரை என்ன சொல்வது? இன்று யாழ்பபாணத்தின் முகமாலையிலும் கடும் எறிகணை வீச்சோடு வன்னிநோக்கி படைநகர்வு நடந்ததாகச் செய்திகள் வருகின்றன.

மாவிலாறு படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டதை வைத்து ஒப்பந்தத்தை நிரந்தர முடிவுக்குகொண்டு வந்துவிடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் நோர்வே தானாகவே வெளியேறுவது சிறந்தது. புலிகள் வலிந்த யுத்தத்தைத் தொடுக்க வேண்டும். நிலமீட்பைத் துரிதப்படுத்த வேண்டும்.
முன்னேறும் படைத்தரப்பை எதிர்கொண்டு மறிப்பதில் மட்டும் ஆள்வலுவையும் ஆயுத வலுவையும் செலவு செய்துகொண்டிருப்பது போராட்டத்துக்கு ஆபத்து.

இன்றைய நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் வேலையை உடனடியாகவே செய்ய வேண்டும். ஒப்பந்தக்காலத்தைப் பயன்படுத்தி கொழுத்து திமிர் பெற்றுவிட்ட கொழும்பை அசைக்க வேண்டும். இன்னொரு கட்டுநாயக்கா வெற்றி தேவை.

திருமலையில் புலிகள் முன்னேற்ற முயற்சி மேற்கொண்டால் அது முஸ்லீம்கள், சிங்களவர் வாழும் பகுதிகளையும் உள்ளடக்கித்தான் வரும். இதைத் தவிர்க்கவே முடியாது. இம் மென்ற முதல் இனஅழிப்பு, பாசிசம் என்று தும்மும் கோமாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக எழுதிக்கொண்டிருப்பது வேலையாக இருக்கலாம். எழுத விசயமில்லாமல் யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கொடுக்கத்தானே வேண்டும்?

இந்தச் சமாதானப் பொறியிலிருந்து மீள முடியாமல் தமிழர் தரப்பு இரு்நதது உண்மை. ரணிலைத் தோற்கடித்தது பொறிமீளல் தந்திரமாகவே பார்க்கப்பட்டது. அதை மேலும் இலகுவாக்கியது ஐரோப்பிய யூனியன். இப்போது சிங்களத்தரப்பே இன்னும் இலகுவாக்கியுள்ளது. இவையனைத்தும் தந்திர வெற்றியென்று இன்னும் உறுதியாகவில்லை.
மகிந்த வெற்றியிலிருந்து இன்றுவரை நடந்தவை அனைத்தினதும் பலாபலன் இனி புலிகள் எடுக்கப்போகும் முடிவில்தான் இருக்கிறது.

Labels: , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: CAPital

கண்காணிப்பு குழு ஒரு பக்கம் அரசையும் பகைக்க முடியாமல், மறுபக்கம் புலிகளையும் பகைக்க முடியாமல் திண்டாடுகிறது. அவர்கள் வெளிப்புறத்தவர்கள். பக்க சார்பினால் ஏற்படும் விளைவை எண்ணி "நடுநிலை" என்று நிற்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் அரசாங்கம் செய்வது பிழை என்று, ஆனால் அரசாங்கமாச்சே என்ன செய்வதென்று முழிக்கிறார்கள்.

தமிழீழம் கோரப்படும்போது அவர்கள் தங்கள் தங்கள் நிலையைச் சொல்வார்கள். அப்போது தெரியும்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

11.6 11.8.2006
 
வன்னி,
உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் நிதானமாக நிலமைகளைக் கையாள வேண்டும். சும்மா உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளில் இறங்கக்கூடாது என்பதே என் கருத்து. அதைத்தான் தமிழர் தலைமையும் செய்கிறது. வன்னி, சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, கடந்த சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பன் புலிகளின் பொறுமை பற்றி ஒரு கருத்தைக் கூறியிருந்தான். அப்போது நான் அதை நம்பாமல் உதாசீனம் செய்தேன். என் நண்பன் சொன்னது என்னவெனில், தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.
 
கப்பிட்டல், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெற்றி,
இந்தக் கதை ஐரோப்பாவில்தான் தொடங்கியதென்று நினைக்கிறேன். இதில் இருக்கும் தர்க்கரீதியான விசயம் எனக்குப் புரியவேயில்லை.

முதலில் ஏற்கனவே இருக்கும் சட்டங்கள், நடைமுறைகளை ஈழப்போராட்டத்துக்குப் பொருத்திப் பார்க்க எந்த பன்னாட்டுச் சக்தியாவது தயாரா என்று தெரியவில்லை.
இருந்தால் ஏற்கனவே உலக வரலாற்றிலுள்ள பல விசயங்கள் எமக்கு மீட்சியைப் பெற்றுத் தந்திருக்கும்.

தாங்களே இயற்றிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக்கூட சரிவரப் பேண அரசதரப்பை நிர்ப்பந்திக்க விரும்பாமல் வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகம், இல்லாத ஒன்று என நான் கருதும் இந்த '5 வருடம் கடைப்பிடித்தால் அங்கீகரிக்க வேண்டும்' என்ற விசயத்தை நடைமுறைப்படுத்தும் என எண்ணத் தோன்றவில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]