Sunday, December 17, 2006

திருச்சித்தமிழனுக்கு அஞ்சலி

இற்றைக்குப் பதினொரு வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் செத்தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று "அப்துல் ரவூப்" என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.

இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.

இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.

இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு 'இனி' என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.
"சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா" என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது.
எம் நிலைப்பாடும் அதுவே.

ஆனாலும் உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை.

திருச்சிச் சகோதரனுக்கு எம் அஞ்சலி.

_____________________________________________

Labels: , , ,


Comments:
ஆம் நண்பரே நன்றாய் நினைவிருக்கிறது. தவிர்க்கபடவேண்டியது தான் இவ்வகை மரணங்கள். தோழர்.ரவணா வீட்டில் அகவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார். நான் கோபி போன்ற தி.க.தோழர்கள் கலந்துகொண்டோம்.


அவருக்கு அஞ்சலிகள்
 
வன்னியன்!
உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்.

எங்களுக்காய் மரணித்த எம் சகோதரனுக்கு இதயபூர்வமான அஞ்சலிக்கின்றேன்.
 
எழுதிக்கொள்வது: யாழ்த்தமிழன்

//இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய்,,,,,
ஆனாலும் உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை. //

இவ்வரிகளுடன் நான் முற்று முழுதாய் ஒத்துப்போகிறேன். இருப்பினும் அப்துல் ரவூப் அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

10.12 17.12.2006
 
எழுதிக்கொள்வது: அஞ்சலி.

திருச்சிச் சகோதரனுக்கு எம் அஞ்சலி.

18.14 17.12.2006
 
வன்னி,
உண்மைதான். இப்படியான சாவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் தன் இனம் படும் இன்னல் கண்டு தன்னை அழித்துக் கொண்ட இன மான உணர்வாளனுக்கு நானும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
செந்தில், மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிவு தொடர்பான மேலதிக தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமாக இடுங்கள்.
 
யாழ்த்தமிழன்,
அஞ்சலி,
வெற்றி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
எழுதிக்கொள்வது: மாசிலா

உடலால நம்மை விட்டு பிரிந்தாலும் உள்ளத்தால் நம்மிடமே இருக்கிறார். அத்தமிழருக்கு எம் அஞ்சலி. குடும்பத்தாருக்கு எமது அனுதாபங்கள்.
அன்புடன் மாசிலா.

10.2 18.12.2006
 
எழுதிக்கொள்வது: சுல்தான்

அப்துர்ரவூப் தீக்குளித்து இறந்தது பெரம்பலூரில்.
பெரம்பலூர் என்பது இப்போது தனி மாவட்டம்.
இன்னும் திருச்சியையே சொல்லிட்டிருக்கீங்க.
இறந்த அவன் முஸ்லீம் என்பதற்காவது இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு நீங்கள் செய்யப்போவது என்ன?
ஜடாயு பதிவில் உங்களது ஆட்களின் பின்னூட்டத்தைப் பாருங்கள்.
http://jataayu.blogspot.com/2006/12/blog-post_116636731688961970.html
குறைந்த பட்சம் அதை எதிர்க்கவாவது செய்யலாம்.

16.30 19.12.2006
 
மாசிலா,
வருகைக்கு நன்றி.

சுல்தான்,
வருகைக்கு நன்றி.
அந்த நேரத்தில் கேள்விப்பட்டதாக நான் ஞாபகம் வைத்திருப்பதைத்தான் எழுதினேன். அது திருச்சியில்லை என்றால் தவறுதான். நீங்கள் சொன்னபின் ஈழத்தவரால் பதிவு செய்யப்பட்ட இன்னொரு விவரத்தைப் பார்த்தேன். அதிலும் திருச்சியென்றுதான் உள்ளது. உங்கள் திருத்தத்துக்கு நன்றி. இன்னும் சரியாக உறுதிப்படுத்திவிட்டு பதிவில் மாற்றம் செய்கிறேன்.
__________________--
இறந்து போனவர் முஸ்லீம் என்பதற்காக இலங்கை முஸ்லீம்களுக்கு ஏதும் சிறப்பாகச் செய்யத் தேவையில்லை.
வடக்கு கிழக்கில் வாழும்/வாழ்ந்த முஸ்லீம்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமையும் வழங்கப்பட வேண்டும்.
இதில் அப்துல் ரவூப் தமிழகத்தில் தீக்குளித்து இறந்ததற்காகவோ இன்குலாப் பாட்டு எழுதினதுக்காகவோ அப்துல் ரகுமான் ஆதரவுக் கவிதை எழுதினதுக்காகவோ இலங்கை முஸ்லீம்களை கொஞ்சம் கவனியுங்களென்பது எல்லாத்தையும் கொச்சைப்படுத்துவது.
__________________-
ஜடாயு போன்றவர்களின் பதிவுகளை நான் கணக்கெடுப்பதில்லை. அவைகுறித்து வாதிடவோ கருத்துச் சொல்லவோ எதுவுமில்லை. அங்குப் பின்னூட்டமிட ஈழத்தமிழனோ, புலி ஆதரவாளனோ வரவேண்டுமென்பதில்லை. அதை ஜடாயு போன்றவர்களோ அவர்களது கருத்தில் ஒன்றியவர்களோ கூட செய்யலாம். இப்படி நிறைய விசயத்தை வலைப்பதிவுகளில் பார்த்தாயிற்று.

முடிவாக அங்கிடப்பட்ட பின்னூட்டம் தொடர்பாக நான் எதுவும் சொல்வதற்கில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]