Sunday, April 23, 2006

வரலாற்றுக் குரற் பதிவுகள்.

குரற் பதிவுகள் போடாமல் எனது நட்சத்திரக் கிழமை முழுமை பெறாது. போதாததுக்கு அன்பர்கள் சிலரும் குரற்பதிவு போடச் சொல்லி ஒரே அரியண்டம். அதால பதிவு போடுறதெண்டு முடிவெடுத்திட்டன். ஒண்டில்ல, ரெண்டில்ல ஏழு ஒலிக்கோப்புக்கள். எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள்.

குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)




***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)


***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)


***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.


**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு


**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.

**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.


*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.

இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.

சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.

இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.

Labels: , , , , , ,


Comments:
நன்றி வன்னியன்....
 
எழுதிக்கொள்வது: தமிழ் சசி

மிக்க நன்றி இந்தப் பதிவுக்கு

இந்த ஆவணங்கள் (விடியோ போன்றவை) இணையத்தில் கிடைக்கிறதா ?

16.38 23.4.2006
 
மிக்க நன்றி
 
குழைக்காட்டான்,
தமிழ்ச் சசி,
சந்திரவதனா,
வருகைக்கும் கனிவுக்கும் நன்றி.

தமிழ்ச்சசி,
இணையத்தில் இரண்டொரு சிறுதுண்டுகள் பார்த்த ஞாபம். ஆனால் முழுமையாக யாரும் இடவில்லை.
விடுதலைத் தீப்பொறியுட்பட பல (பெரும்பாலும் எல்லா) வெளியீடுகள் இணையத்தில் விற்பனைக்குண்டு.

விடுதலைத் தீப்பொறி -1.
விடுதலைத் தீப்பொறி -2.
 
வன்னியன்!
நட்சத்திர வாரப்பதிவுகள் யாவும், எங்கள் தாயக நினைவோடு இருந்தது, உங்கள் தாயகப்பற்றின் அருமையான வெளிப்பாடு. பாராட்டுக்கள்.
 
மலைநாடான்,
வருகைக்கு நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]